லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம், 10 நாட்களை கடந்து ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படம், தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லியோ படம்:


'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மீண்டும் கைக்கோர்த்துள்ள படம், லியோ. இரண்டாவது முறையாக இணைந்து இவர்கள் பணியாற்றியுள்ள லியோ படமும் வெற்றியடைந்துள்ளது. லியாே படத்தின் திரைக்கதையை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி எழுதியுள்ளனர். 


படக்குழுவினர்:


லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி மற்றும் கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த்  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லியோ படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இப்படம், (Leo Movie) படம் கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய படங்களின் தொடர்ச்சிகளை கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும். லியோ படம் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.  எப்போதும் போல் இருக்கும் விஜய் படங்களை போன்று இல்லாமல். இப்படத்தில் அறிமுக பாடல், பஞ்ச் டைலாக் என எதுவும் இல்லை. மேலும், முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. 


லியோ-முதல் நாள் வசூல்:


லியோ திரைப்படம் முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. படம் வெளியாகி 10 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் செய்துள்ள வசூல் என்ன தெரியுமா? 


மேலும் படிக்க | Leo OTT Release Date: ஓடிடியில் லியோ படம்...எப்போது ரிலீஸ்?


தமிழகத்தில் எவ்வளவு வசூல்?


உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படம் தமிழகத்தில் ரூ.166 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


படத்தின் இரண்டாம் பாதி குறித்து பேசிய லோகி..


கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அப்போது லியோ படத்திற்கு கிடைத்துள்ள விமர்சனங்கள் குறித்தும் அவர் பேசினார். அதில், முதல் பாதி நன்றாக இருப்பதாகவும் இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்வதாக ரசிகர்கள் விமர்சனம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விமர்சனங்களை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினிகாந்தின் 171வது படத்தை முடித்த பிறகு கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 


அதிகம் சம்பளம் பெற்ற நடிகர்கள்:


லியோ பட நாயகன் விஜய், அதில் நடிப்பதற்காக ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய் நடிக்கும் ‘தளபது 68’ அவர், 150 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம். லியோ படத்தில் விஜய்யை அடுத்து அதிக சம்பளம் வாங்கியுள்ளவர், இந்தி நடிகர் சஞ்சய் தத் என கூறப்படுகிறது. இவரும் விஜய் போலவே திரையுலகில் மிகவும் அனுபவசாலி என்பதால் இவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத், லியோ படத்திலும் ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் 8 கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் இருந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | Leo Box Office Day 1: முதல் நாளே ஜெய்லர் வசூலை மிஞ்சிய லியோ! எத்தனை கோடி தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ