கொரோனா ஊரடங்குக்கு பிறகு கிட்டதட்ட 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முன்னணி பிரபலங்கள் பலர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இன்று காலை முதலே படுவேகமாக பரவி வரும் ஒரு செய்தியானது கோலிவுட் (kollywood) வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


ALSO READ | பிஞ்சுப் பிள்ளைகளின் பொதுத்தேர்வுகளை நீக்கிய அரசுக்கு நன்றி!


காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருதய நோய் பிரச்சனை காரணமாக வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ள அவருடைய உதவியாளர், அவர் வழக்கமான சோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.


ALSO READ | நாம் எந்த மொழியையும் எதிர்ப்பவர்கள் இல்லை; சொந்த மொழியைக் காப்பவர்கள்: வைரமுத்து


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR