உலகம் படிப்படியாக முன்னேறி வருவது போல தமிழ் திரையுலகும் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அப்கிரேட் ஆகி வருகிறது. கமர்ஷியல் படங்களையும் காதல் படங்களையும் மட்டுமே இயக்கி வந்த இயக்குநர்கள், தங்கள் கதைகளிலும் புதிய பரிமானத்தை காண்பித்து வருகின்றனர். கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களாக இருக்கும் பலர், பிரபல ஹீரோக்களுக்கு தராத அற்புதமான கதாப்பாத்திரங்களை கூட, காமெடி நடிகர்களாக வலம் வந்தவர்களுக்கு கொடுத்து அவர்களை வேறு ஒரு ஆளாக மெருகேற்றி வருகின்றனர். அப்படி, காமெடி நடிகர்களாக இருந்து தற்போது சீரியஸ் கதாநாயகர்களாக மாறியுள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நயன்தாரா-வீக்னேஷ் சிவன் மீது அவர்களின் குடும்பத்தினர் பரபரப்பு புகார்..!


நாகேஷ்:


மறக்க முடியாத கலைஞர்கள் பலரை நம் திரையுலகு நமக்கு அளித்திருந்தாலும், அதில் ஒரு சிலரை மட்டுமே அவர்கள் கூறிய வசனங்களை வைத்து நினைவில் வைத்திருக்க முடியும். அப்படிப்பட்ட சிறந்த கலைஞர்களுள் ஒருவர், நாகேஷ். சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் போன்ற பெரிய ஹீரோக்ளின் படங்களில் நகைச்சுவை கலைஞராக வந்த இவர், ஒரு கட்டத்தில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். அந்த படங்களிலும் நகைச்சுவை உணர்வோடு பேசினாலும், அதன் மூலம் சமூகத்திற்கு பல கருத்துகளை சொன்னார் நாகேஷ்.


வடிவேலு:


தமிழ் சினிமாவின் முதல் வரிசை நாயகர்களாக இருக்கும் பெரும்பாலானோருடன் பல படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு. இம்சை ‘அரசன் 23ஆம் புலிகேசி’ படம் மூலம் காமெடி நாயகனாக உருவெடுத்தார். ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படம் அவருக்கு அப்படியே வேறு முகத்தை கொடுத்துள்ளது. சாதியை வைத்து ஒடுக்கப்படும் ஒருவரின் மன வலியை அப்படியே ரசிகர்களின் மனங்களில் மாமன்னன் படம் மூலம் கடத்தியிருந்தார் வடிவேலு. படத்தில் ஹீரோ உதயநிதி அல்ல வடிவேலுதான் என சொல்லும் அளவிற்கு சீரியஸாக இருந்தது இவரது நடிப்பு. 


சூரி:


‘இந்த டைலாக்லாம் நான் சொன்னா சிரிச்சிருவாங்கப்பா..’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியவர் சூரி. சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால் போன்ற பிரபல நடிகர்களுக்கு நண்பனாக நடித்து வந்த இவர், விடுதலை படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். துணை கதாப்பாத்திரமாக இருந்து இதுவரை காமெடி செய்து வந்த இவர், விடுதலை படத்தை தாங்கி பிடிக்கும் தூணாக இருந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இவரின் இந்த சீரியஸ் முகத்தை வெளிகொண்டு வந்தவர், வெற்றிமாறன். விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் தற்போது ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


யோகி பாபு:


நீண்ட நாளாக தமிழ் சினிமாவில் ‘பண்ணி மூஞ்சி வாயனாக’ இருந்தவர் யோகி பாபு. இவரது உருவத்தை வைத்தும் தாேற்றத்தை வைத்தும் ஒரு படத்தில் இவருக்கு வைக்கப்பட்ட பெயர் இது. இவர் இப்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணை கதாப்பாத்திரமாகவும் காமெடி கதாப்பாத்திரமாகவும்தான் நடித்து வருகிறார். ஆனால் இவருக்குள்ளும் ஒரு ஹீரோ உறங்கிக்கொண்டிருக்கிறார் என அனைவருக்கும் உணர்த்திய படம், பொம்மை நாயகி. அதில், தனது குழந்தைக்கு நீதி கிடைக்க போராடும் அப்பாவாக நடித்து பலரையும் கலங்க வைத்தார். 


ட்ராக் மாறும் தமிழ் சினிமா..


முன்னர் இருந்ததை விட தற்போது தமிழ் சினிமாவில் திறமைகள் அதிகமாகிவிட்டன. இயக்கம், நடிப்பு, இசை என அனைத்து பரிமாணங்களிலும் தற்போது புதுமை புரட்சி உருவாகிவருகிறது. அதன் ஒரு பக்கம்தான், நகைச்சுவை நாயகர்கள் ஹீரோக்களாக மாறுவது. கமர்ஷியல் படங்களை மட்டும் ரசித்து வந்தவர்களின் ரசனைகளில் தற்போது நன்றாகவே மாற்றம் தெரிகிறது. ஒரே ட்ராக்கில் பயணித்து கொண்டிருந்த தமிழ் சினிமா தற்போது ட்ராக் மாறி அழகான பயணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 


மேலும் படிக்க | ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் ‘இந்த’ பிரபலமான பாடலின் காப்பியா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ