ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் ‘இந்த’ பிரபலமான பாடலின் காப்பியா..?

Kaavaalaa Jailer First Single: ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் பாடல் முதல் பாடல் நேற்று வெளியானது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 7, 2023, 05:00 PM IST
  • ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது.
  • தமன்னாவின் நடனத்தில் வெளிவந்த இப்பாடலின் பெயர் ‘காவாலா’
  • இந்த பாடல் வேறு ஒரு பிரபலமான பாடலை நினைவு படுத்துவதாக ரசிகர்கள் கருத்து.
ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடல் ‘இந்த’ பிரபலமான பாடலின் காப்பியா..?  title=

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார் என பலர் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்த படத்தின் முதல் சிங்கிளான ‘காவாலா’ பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல், வேறு ஒரு பிரபலமான பாடலை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

‘காவாலா’ பாடல் வெளியீடு:

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள படம், ஜெயிலர். நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முக்கிய கதாப்பாத்திரங்களில் மூன்று திரையுலக சூப்பர் ஸ்டார்கள் நடிக்கின்றனர். மலையாளத்தின் பிரபலமான நடிகர் மாேகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் ஜெயிலர் படத்தில் கெளரவ தோற்றத்தில் வருகின்றனர். தமன்னா முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார். படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து, நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. இதில் தமன்னா இதுவரை இல்லாத அளவிற்கு ஆட்டம் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

மேலும் படிக்க | தன்னைவிட 6 வயது கம்மியான ஹீரோவுக்கு ஜோடியாகும் திரிஷா!

“இது அதுல்ல..!”

ஆங்கிலத்தில் பல பாடல்கள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளன. ஆங்கிலமே தெரியாதவர்கள் கூட இது போன்ற மிகவும் பிரபலமான பாடல்களை விரும்பி கேட்பதுண்டு. அப்படிப்பட்ட பாடல்களுள் ஒன்றுதான், saminamina Waka Waka பாடல். இதை, பிரபல பாப் பாடகியான ஷகிரா பாடியிருந்தார். இந்த பாடலின் பிண்ணனியில் காடு போல செட் போடப்பட்டிருக்கும். இதில் நடனமாடும் நாயகி, குட்டை பாவாடை அணிந்து காெஞ்சம் சுருள் முடியும் வைத்திருப்பார். இதை அப்படியே ஜெயிலர் படத்தின் ‘காவாலா’ பாடலில் காப்பி அடித்துள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர். 

Kaavaalaa song

கவர்ச்சி கடலில் தமன்னா…!

‘காவாலா’ பாடலில், நடிகை தமன்னா இதுவரை செய்திராத சுருட்டை முடி சிகை அலங்காரத்தை செய்திருந்தார். அதுமட்டுமன்றி, தமிழ் படங்களில் தனது இடுப்பை தவிர வேறு எந்த பாகத்தையும் காட்டாமல் நடித்து வந்த அவர், ‘காவாலா’ பாடலில் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே கவர்ச்சி காண்பித்திருக்கிறார். இந்த பாடலில் அவ்வப்போது நடனமாடும் ரஜினியை ‘ஓரமா போ தலைவா..தமன்னாவை பாக்கனும்..’ என்று கமெண்டுகளில் கலாய்த்துள்ளனர் ரசிகர்கள். தமன்னாவின் இந்த மாற்றம் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

வரலாற்றை மாற்றிய நெல்சன்..!

தமிழ் சினிமாவை பொறுத்த வரை, ஹீரோக்கள் முக்கிய கதாப்பாத்திரமாக இருக்கும் படங்களில் அவர்களின் இண்ட்ரோ பாடல்தான் முதல் சிங்கிளாக வெளிவரும். நாயகி முக்கிய கதாப்பாத்திரமாக வரும் படங்களில் மட்டுமே, முதல் சிங்கிளாக பெண் பாடிய பாடலோ, அல்லது நாயகி குறித்த பாடலோ வெளிவரும். ஆனால், ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாரே கதாநாயகனாக இருக்கும் போது தமன்னா நடனமாடியுள்ள பாடல் முதல் சிங்கிளாக வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது என ரசிகர்கள் நெல்சனுக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். 

ஜெயிலர் ரிலீஸை நோக்கி ஆவலுடன் ரசிகர்கள்..

‘டாக்டர்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்த நெல்சன் திலீப் குமார் தான் அடுத்து இயக்கிய ‘பிஸ்ட்’ படம் மூலம் அந்த பெயரை அவப்பெயராக்கி கொண்டார். அவருக்கு ஜெயிலர் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததை தொடர்ந்து, பீஸ்ட் பட்த்தின் நெகடிவ் விமர்சனங்களால் அந்த வாய்ப்பு பறிபோய் விடுமோ என நெல்சன் பயந்தாரோ இல்லையோ, ரசிகர்கள் பயந்தனர். கடைசியில், சில நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஜெயிலர் படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன். நெல்சனின் கதை என்பதை தாண்டி, படத்தில் மூன்று திரையுலக சூப்பர் ஸ்டார்களையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவிற்கு, ஜெயிலர் படத்தில்தான் நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படம், அடுத்த மாதம் 10ஆம் தேதியன்று திரைக்கு வருகிறது. 

மேலும் படிக்க | நயன்தாரா-வீக்னேஷ் சிவன் மீது அவர்களின் குடும்பத்தினர் பரபரப்பு புகார்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News