சிம்பு - வெங்கட்பிரபு கூட்டணியில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்கில் வெளியானது.  படம் வெளியாகும் முதல் நாள் தயாரிப்பாளர் மாநாடு படம் நாளை வெளியாகாது என்று தீடீரென அறிவிப்பு கொடுத்தார்.  இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பின்பு, காலை முதல் காட்சி தவிர படம் வெளியானது.  யாரும் எதிர்பார்க்காத விதமாக மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மலையாள பட ரீமேக்கில் சிம்பு-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி?


இந்நிலையில் நேற்று மாநாடு வெளியாகி 100 நாட்கள் கடந்ததை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில், " எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் "துணிந்து இறங்கு" எனத் தட்டிக் கொடுப்பவர். துணிந்து இறங்கி செய்த படம் "மாநாடு". இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது. சமீபகாலமாக 100வது நாள் கடலில் போட்ட பெருங்காயமாய் கரைந்தே போய்விட்டது. ஆனால், நான்கு நாட்களில் திரையரங்கிலிருந்து படத்தை துரத்திவிடும் இந்நாட்களில் "மாநாடு" தரமான வெற்றியை, மகிழ்ச்சியை தமிழ் சினிமாவோடு பகிர்ந்திருக்கிறது. 



வெற்றி என்பது சாதாரணமல்ல. பல நல்ல உள்ளங்களின் கூட்டு உழைப்பு. இப்படம் 100 நாட்களைத் தொடக் காரணமான  இயக்குநர் வெங்கட் பிரபு, சிலம்பரசன் TR,  எஸ். ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் எஸ் ஏ சி, வாகை சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், பிரேம்ஜி, உதயா, மஹத், அஞ்சனா கீர்த்தி, கருணாகரன், பஞ்சு சுப்பு, மனோஜ் கே பாரதி, அரவிந்த் ஆகாஷ், டேனி உட்பட்ட அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா ஒரு ராஜாங்கமே செய்துவிட்டார். அவருக்கு என் நன்றிகள். அசாத்திய தொழில் நுட்பங்களோடு அசத்திய ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன், "எடிட்டிங் கிங்" கே எல் பிரவீண், சண்டைப்பயிற்சியாளர் சில்வா,  கலை இயக்குநர் உமேஷ் ஜே குமார், ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர், விளம்பர வடிவமைப்பு ட்யுனி ஜான் ஆகியோர் மாநாடு படத்தின் பலமாக நின்றார்கள். அவர்களுக்கு என் மனதார்ந்த நன்றிகள்.



சாதாரண படமாகத் தொடங்கினேன். இரண்டு வருட கொரோனா இடைவெளி யாவையும் தாண்டி என்னோடு பயணித்த அன்பின் இளவல் சிலம்பரசன் இப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது. அதனால் மட்டுமே இது அசாதாரணப் படமாக மாறியது. உடல் எடை குறைத்து புதிய நபராக இப்படத்தில் தோன்றி மக்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் என்பதே உண்மை. மிக்க நன்றி அவருக்கு.  மிக முக்கியமாக, மாநாடு படத்தின் வெற்றி மேஜிக்காக மாறிய எஸ்.ஜே சூர்யாவுக்கு என் மானசீக நன்றிகள். வெங்கட் பிரபுவின் அயராத உழைப்பும், இயக்கமும் ஒரு தெளிவான வெற்றியைத் தேடித் தந்தது. இவர்களால் இன்று மாநாடு நூறு நாட்களைத் தொடுகிறது. இதயம் முழுக்க மகிழ்வுடன் இவ்வெற்றியை என் தாய் தந்தையருக்கு சமர்ப்பிக்கிறேன்" தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | 'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இவர்களா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR