'பரியேறும் பெருமாள்' என்ற தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட திரைப்படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மாரி செல்வராஜ். தொடர்ந்து, தனுஷை வைத்து எடுத்த 'கர்ணன்' திரைப்படமும் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் மாவட்டங்களில் நிலவிய, நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை செயல்பாடுகள், பண்பாட்டு கூறுகள் உள்ளிட்டவை இவர் இவருடைய திரைப்படங்கள் அடிநாதமாக அமைந்துள்ளது. 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக 'வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  தற்போது 'மாமன்னன்' படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து வெளி வந்த நிவாஷினிக்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சு?



தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  


தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், 'வாழை' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 


இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. 



மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.


மேலும் படிக்க | அல்லு அர்ஜுனின் நண்பருக்கு எதிராக நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ