பிக்பாஸில் இருந்து வெளி வந்த நிவாஷினிக்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சு?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நிவாஷினி வெளியாகி உள்ள நிலையில் தற்போது அவரது ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 21, 2022, 02:32 PM IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நிவாஷி எலிமினேஷன் ஆனார்.
  • பிக்பாஸ் சீசன் 6 தமிழ் 40 நாட்களை எட்டியிருக்கிறது.
  • நிவாஷினிக்கு எவ்வளவு செட்டில்மெண்ட்..
பிக்பாஸில் இருந்து வெளி வந்த நிவாஷினிக்கு எவ்வளவு செட்டில்மெண்ட் ஆச்சு?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அப்டேட்: பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தமிழ் 43 நாட்களை எட்டியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். ஏறத்தாழ இந்த பிக்பாஸ் சீசன் பாதி நெருங்கிவிட்டது. இதில் சண்டை சச்சரவுக்களுக்கு பஞ்சமில்லை என்றே சொல்லலாம். விக்ரமன், அசீம், தனலட்சுமி ஆகியோர் வீட்டில் நாள்தோறும் ஏதாவதொரு தகராறில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் போட்டி சென்று கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், சில ரொமான்ஸூகளும், கிரஷ்களும் அங்கங்கே வந்துபோகிறது. இப்போதைக்கு கிரஷ் சீன்கள் என்றால் ராபர்ட் மாஸ்டர், ரக்ஷிதாவுடன் செய்யும் விளையாட்டுகள் தான். அதன்படி இந்த நிகழ்ச்சியில் முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து அந்த வாரம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி குறைந்த வாக்குகளுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின்னர் அசல் கோளாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார், தொடர்ந்து ஷெரினா, விஜே மகேஷ்வரி ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ

இந்த நிலையில் கடந்த வார ஓட்டிங் விவரப்படி ரசிகர்கள் வேறொருவர் வெளியேறுவார் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் நடந்ததே வேறு, நிவாஷினி வெளியேற்றப்பட்டார். மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாவார் நிவாஷினி.

தற்போது நிவாஷினி ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது, அத்துடன் தற்போது வரை எவ்வளவு செட்டில்மெண்ட் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான செய்தி வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நிவாஷினி ஒரு நாளைக்கு ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 42 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சுமார் 56 ஆயிரம் ரூபாயுடன் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தூரத்துலதான்டா காமெடி கிட்ட பார்த்தா டெரர்டா... வில்லனாகிறார் வடிவேலு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News