Master Film Remake: கொரோனா காலத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி சக்கைப்போடு போட்ட படங்களில் முதலிடத்தில் மாஸ்டர் படம் கண்டிப்பாக இருக்கும். நடிகர் விஜய்யின் 2021 ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான மாஸ்டர் ரசிகர்க்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்தது என்றே கூறலாம். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இது இருந்தது. கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் உலகளவில் இந்த படம் திரைக்கு வந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருந்த போதும், மாஸ்டர் படம் வியக்கத்தக்க அளவில் பாக்ஸ் ஆபீசில் சக்கைப்போடு போட்டது. நடிகர் விஜய்க்கு (Actor Vijay) ஊரடங்கு ஒரு தடை அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. 


ALSO READ: விஜயின் மாஸ்டர் படத்தின் டெலிடட் காட்சிகளுக்கு அதிரடியான வரவேற்பு!


இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் (Master Film) இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சமீபத்தில் செய்தி வந்தது. ரீமேக்கில் விஜய் வேடத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கவுள்ளார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து இந்த திரைப்படத்தை எண்டெமால் ஷைன் இந்தியா மற்றும் முராத் கெதானி ஆகியோர் தயாரிக்கவுள்ளனர். தமிழ் மாஸ்டர் படத்தில் மிக முக்கியமான விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) பவானி பாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர்களில் ஒருவருக்கான தேர்வு நடந்து வருகிறது. 


முதலில் ஏப்ரல் 9, 2020-யில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த மாஸ்டர் படம், கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 2021 ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் பேனரின் கீழ், சேவியர் பிரிட்டோவால் தயாரிக்கப்பட்ட மாஸ்டர் படத்தில், அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தானு மற்றும் ஆண்ட்ரியா ஆகியோரும் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.


ALSO READ: Top 10 Box Office வசூல் படங்களின் பட்டியலில் நுழைந்தது தளபது விஜய்யின் #Master!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR