தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அண்மையில் வெளியாகி, சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்பட டீஸரில் இருந்த பல காட்சிகள் திரைப்படத்தில் இல்லை.
தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி இருக்கும் ‘மாஸ்டர் டெலிடட் சீன்ஸ்’ என்பதில் கெளரி கிஷன் கையை விஜய் ஆக்ரோஷமாக பிடித்துக்கொண்டு இழுத்து வருவார். ஆனால், படத்தில் அந்த காட்சிகள் இல்லை.
படத்தில் நீக்கப்பட்ட அந்தக் காட்சிகள் அமேசன் ப்ரைமில் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தில் சவீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த கெளரி கிஷனின் வீடியோ பரப்பப்படு. அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்லும்போது, கல்லூரி பிரின்ஸ்பால் வாபஸ் வாங்கச்சொல்வார். அப்போது புகாரை வாபஸ் வாங்கக்கூடாது என்று சொல்லும் காட்சியில் நடிகர் விஜய் பேசும் வசனங்கள் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! #MasterOnPrime@actorvijay @VijaySethuOffl @MalavikaM_ @andrea_jeremiah @imKBRshanthnu @iam_arjundas @Dir_Lokesh @MasterOfficiaI#MasterDeletedScene pic.twitter.com/V77wQyHDQG
— #MASTER (@MasterOfficiaI) February 6, 2021
ரேப் மர்டர் செய்யப்பட்ட பெண்களோட ட்ரெஸ் ஸ்கூல் யூனிபார்ம், பர்தா, குழந்தையின் பேம்பர்ஸ் என பலவாறு உள்ளது என்று சொல்லும் வசனங்கள் இன்றைய சூழ்நிலையை பிரதிபலிக்கிறது. இது, பெண்களின் ஆடை அணியும் விதமும் பாலியல் வன்புணர்வு நடக்கிறது என்று சொல்பவர்களுக்கு சாட்டையடி கொடுப்பதாக அமைந்துள்ளது.
Also Read | Kajal Aggarwal வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்: காஜலுக்கு twin sister உள்ளாரா?
மாஸ்டர் டெலிடட் சீன்ஸ் என்ற ஹேஷ் டேகும் வைரலாகிறது. அதனால், பெண்களைப் போகப்பொருளாக பாவிக்கும், பார்க்கும் சமூகத்தில்தான் மாற்றம் வேண்டும் என்பதை உணர்த்தும் வசனமாக இருக்கிறது விஜ்ய பேசும் உணர்ச்சிபூர்வமான வசனங்கள். இவை படத்தில் இருந்திருக்கலாமே? என்று விஜயின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அருமையான காட்சிகள் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆனால், படத்தின் நீளம் கருதியே பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறுகிறார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR