விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரின் மூலம் பிரபலமானவர் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா.  கல்லூரி படிப்பை முடித்த பிறகு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியை தொடங்கி பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஆபிஸ்' சீரியலில் நடித்தார்.  தற்போது  'பாண்டியன் ஸ்டோர்ஸ்'  சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.  திடீரென்று இவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுவதாக செய்திகள் தீயை பரவியது, இந்த செய்து உண்மையா பொய்யா என்று ரசிகர்கள் குழம்பியிருந்த சமயத்தில் ஹேமாவே அவரது யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | குடும்பப் பிணைப்பை சித்தரிக்கும் ‘பச்சைக்கிளி’ : புதிய மெகா சீரியல்


வழக்கமாக டெய்லி வ்லாக்ஸ் போடுபவர், தற்போது தனக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.  அவருக்கு வலது பக்க மார்பகத்தில் கட்டி இருந்துள்ளது, அதனை கண்டு ஆரம்பத்தில் அவர் தனக்கு புற்றுநோய் வந்துவிட்டதோ என நினைத்து தான் பயந்ததாக கூறினார்.  ஒவ்வொரு தடவை பயாப்ஸி முடிந்து வீட்டுக்கு வரும்போது பயந்தேன், பின்னர் ஒருவழியாக முடிவு செய்து அந்த கட்டியை அகற்றிக்கொள்ள முடிவு செய்தேன்.  அறுவை சிகிச்சைக்கு முன்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதற்கு பிறகு தான் என்னை அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்தனர்.  கிட்டத்தட்ட 6 மாத காலங்களாக அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு செய்யமுடியாமல் போய்விட்டது.



தற்போது தான் இந்த சிகிச்சையை உடனடியாக செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இப்போது செய்திருக்கிறேன், அந்த கட்டி கிட்டத்தட்ட 4 செ.மீ அளவு இருந்தது.  எனக்கு குழந்தை பிறக்கும் போது செய்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, இரண்டாவது முறையாக இப்போது அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  மேலும் தான் தற்போது நலமாக இருப்பதாகவும், வீடு திரும்பிவிட்டதாகவும், இது சிறிய அளவிலான சிகிச்சை தான் என்றும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | நாளை (ஜூலை-1 ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR