1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு இன்று மதியம் தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாராவின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் காத்து இருந்த நிலையில், இன்று அவரது நீண்ட நாள் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை மணம் முடிக்கிறார். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலர்களாக மாறிய இந்த ஜோடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் உறவில் இருந்து வந்த நிலையில் தற்போது கணவன் மனைவியாக மாறியுள்ளனர். மகாபலிபுரத்தில் ஷெரட்டன் கிராண்ட் என்கிற ரிசார்ட்டில் இவர்களது திருமணம் இன்று காலை 09:30 மணியளவில் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | நயன்தாராவின் Exclusive புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
திருமண விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் என கிட்டத்தட்ட 200 நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களது நிச்சயதார்த்தமும் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இவர்களது திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலானது, அதில் மணமக்களின் பெயர்கள், திருமணம் நடைபெறும் இடம், நேரம் என மிகவும் எளிமையாக அச்சிடப்பட்டு இருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழக முதல்வரை சந்தித்து திருமண அழைப்பு விடுத்த சில போட்டோக்களும் இணையத்தில் பரவியது.
மேலும் இந்த காதல் ஜோடியின் திருமணம் நடைபெறும் இந்த தினத்தில் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய நேரத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் விதமாக உணவளிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றனர். ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட சில முக்கியமான கோயில்களிலும் உணவளிக்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்து இருக்கின்றனர்.
மேலும் படிக்க | அதிக சம்பளம் பெறும் நடிகைகள்- நயன்தாராவை முந்திய பூஜா ஹெக்டே?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR