Poonam Pande Arrest For Faking Her Death: பாலிவுட் பிரபலமான பூனம் பாண்டே, ‘லாக் அப்’ என்ற நிகழ்ச்சி மூலமாக பலரால் அறியப்பட்டார். இந்த நிலையில், அவர் இறந்து விட்டதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் திடீரென்று உயிருடன் வந்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவினை வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறந்தது பாேல நாடகம்..


பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்து விட்டதாக நேற்று முன்தினம் பதிவிடப்பட்டது. 32 வயது நிரம்பிய பூனம், அதற்குள் இப்படி இறந்து விட்டாரே என அவரது ரசிகர்களும் திரையுலகினரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அவரே தனது சமூக வலைதள பக்கங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் சாகவில்லை எனவும் கருப்பை வாய் புற்றுநாேய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்ததாகவும் தெரிவித்தார். இது பொது மக்களிடையே கடும் கண்டனத்திற்கு உள்ளானது. 


5 ஆண்டு சிறை? 


இறந்தது விட்டதாக தவறான செய்தியை பரப்பிய பூனம் பாண்டேவிற்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நிட்ப சட்டத்தின் பிரிவு 67ன் படி, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை என கூறப்படுகிறது. மேலும், குற்றம் சுமத்தபடும் நபர், 5 முதல் 10 லட்சம் வரை அபராதம் செலுத்த நிர்பந்திக்கப்படும் வகையிலும் அந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், பூனம் பாண்டே மீது யாரேனும் வழக்கு தொடுத்தால் இவருக்கு  3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. 


மேலும் படிக்க | Indraja Shankar: ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த விழா! வைரலாகும் புகைப்படங்கள்..


நடவடிக்கை எடுப்பார்களா? 


பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலர் ஏற்கனவே வலியுறுத்தி வரும் நிலையில், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை கண்டிப்பாக பாயும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இது குறித்து பேசும் சட்ட வல்லுநர்கள், பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என கருத்துகளை தெரிவித்துள்ளனர். 


பூனம் பாண்டே, இறந்தது போல் நாடகமாடியது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், தான் உயிருடன் இருப்பதாகவும் கருப்பை வாய் புற்றுநோய் தனது உயிரை பறிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் உயிரிழந்திருப்பதாகவும்,  இந்த புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க கூடியது என்றும் கூறியிருக்கிறார். இதை தடுக்க HPV தடுப்பூசியினை கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்த நோய் பாதிப்பினால் இனி யாரும் உயிழக்க கூடாது என்றும் கூறியிருக்கிறார். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பூனம் பாண்டே இப்படி செய்துள்ளார் என்பது அவரது மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் கருத்தாக உள்ளது. 


கடுப்பான நெட்டிசன்கள்..


பூனம் பாண்டேவின் இறப்பு செய்தியை அடுத்து, இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் அதிர்ச்சியை தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால், நேற்று அவர் உயிரிழக்கவில்லை என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக தெரிந்தவுடன் அவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். நேற்று முன் தினம் பூனம் பாண்டேவிற்கு RIP போஸ்ட் போட்டு வந்த அவர்கள், தற்போது அவரையே மீம் மெட்டீரியலாக மாற்றிவிட்டனர். 


மேலும் படிக்க | Poonam Pandey: இறந்தது போல் நாடகமாடிய பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ