Poonam Pandey Creates Cervical Cancer Awareness By Faking Her Death: பாலிவுட் நடிகை பூனம் பாண்டே, கர்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்ததாக அவரது சமூக வலைதள பக்கங்களில் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரே இன்று அது குறித்து ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
பூனம் பாண்டே:
பாலிவுட் பிரபலமான பூனம் பாண்டே, நேற்று தனது 32ஆவது வயதில் உயிரிழந்து விட்டதாக அவரது சமூக வலைதள பக்கங்களில் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர் தான் உயிரிழக்க வில்லை எனவும், கருப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இப்படி செய்ததாகவும் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார்.
நடிகையின் இந்த செயல் பலருக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்ததாக அறிவிப்பு:
பாலிவுட்டின் பிரபலமான கேம் ஷோவான, லாக் அப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பூனம் பாண்டே. இவர், கருப்பை வாய் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக அவரது சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில், ‘அன்புக்குரிய பூனம் இன்று காலை உயிரிழந்து விட்டார். அவரை நாம் கருப்பை வாய் புற்றுநோயல் இழந்து விட்டோம். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் பிரைவசி கொடுங்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
பூனம் பாண்டே, மாடலிங் துறையில் இருந்தார். இவர் பதிவிடும் புகைப்படங்களும் ரீல்ஸ்களும் பெரும்பாலான நெட்டிசன்களின் கைகளில் சிக்கி ட்ரோல் மெட்டீரியலாக இருந்தது. இவர் இறந்த செய்தியின் போஸ்டின் கமெண்ட் செக்ஷனில் கூட, பலர் இவரை திட்டி தீர்த்து வந்தனர். அவர் வாழ்ந்த முறை பற்றியும், அவர் திரைத்துறையில் செய்த விஷயங்கள் குறித்தும் இழிவாக இணையதளங்களில் பேசி வந்தனர்.
மேலும் படிக்க | மறக்குமா நெஞ்சம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
ரசிகர்களுக்கு சந்தேகம்..
பூனம் பாண்டே உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக ஊடங்கள் நேற்று கூறின. வழக்கமாக எந்த பிரபலங்கள் உயிரிழந்தாலும் அவர்களது குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுவது வழக்கம். ஆனால், பூனம் பாண்டே உயிரிழந்ததாக அவர் தரப்பில் இருந்து கூறிய பிறகு அவரது குடும்பத்தினரை யாராலும் ரீச் செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டது. மேலும், அவர்களிடம் இருந்து மேற்கொண்டு எந்த தகவலும் இல்லை என்றும் பேசப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு பூனம் பாண்டேவின் இறப்பு மீது பலமாக சந்தேகம் எழுந்தது.
ஏன் இப்படி செய்தார்?
பூனம் பாண்டே, இறந்தது போல் நாடகமாடியது குறித்து ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், தான் உயிருடன் இருப்பதாகவும் கருப்பை வாய் புற்றுநோய் தனது உயிரை பறிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், ‘ஆனால் அதே போல கருப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்த ஆயிரக்கணக்கான பெண்களால் கூற முடியாது.’ என பேசிய அவர், இந்த புற்றுநோய் பாதிப்பு தவிர்க்க கூடியது என்று கூறியிருக்கிறார். இதை தடுக்க HPV தடுப்பூசியினை கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்த நோய் பாதிப்பினால் இனி யாரும் உயிழக்க கூடாது என்றும் கூறியிருக்கிறார். கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே பூனம் பாண்டே இப்படி செய்துள்ளார்.
கடுப்பான ரசிகர்கள்:
பூனம் பாண்டேவின் இறப்பை அடுத்து, இந்தியா முழுவதும் பல கோடி ரசிகர்கள் அதிர்ச்சியை தெரிவித்து நேற்று முதல் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். ஆனால், இன்று அவர் உயிரிழக்கவில்லை என்று தெரிந்தவுடன் அவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். நேற்று பூனம் பாண்டேவிற்கு RIP போஸ்ட் போட்டு வந்த அவர்கள், இன்று அவரையே மீம் மெட்டீரியலாக மாற்றியுள்ளனர்.
மேலும் படிக்க | இதற்காகத்தான் சக்ஸஸ் மீட் நடத்தினோம் - சிங்கப்பூர் சலூன் விழாவில் ஆர்ஜே பாலாஜி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ