90 களின் ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரபு தேவா. ஆரம்பத்தில் நடன இயக்குனராக தன் திரைப்பயணத்தை தொடங்கி பின் நடிகராக அறிமுகமாகி பின் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பன்முக திறனுடன் வலம் வந்தவர் பிரபு தேவா. இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989வது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த பிரபுதேவா, தேவி, குலேபகாவலி, சார்லி சாப்ளின் 2, லக்ஷ்மி ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் மை டியர் பூதம், தேள், பொய்கால் குதிரை ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த ஆண்டு பகீரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது இவர் பிளாஷ் பேக் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து அந்த திரைப்படம் வெளியீட்டிருக்கு தயாராக உள்ளது. 


மேலும் படிக்க | ‘லியோ’ முதல் ‘விடா முயற்சி’ வரை..இந்த மாதம் வெளியாகவுள்ள தமிழ் சினிமா அப்டேட்ஸ்!


இந்நிலையில் பிரபு தேவா நடிக்கவிருக்கும் புதிய படம் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபல மலையாள இயக்குனர் எஸ் ஜே சினு இயக்கும் இப்படத்திற்கு ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் பிரபு தேவாவிற்கு ஜோடியாக வேதிகா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் பகவதி பெருமாள் –பக்ஸ், விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். பேட்ட ராப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் படத்திற்கு டி இமான் இசையமைகின்றார். 



வருகிற 19 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகின்றது.


மேலும் படிக்க | ‘கலக்கப் போவது யாரு’ தீனாவிற்கு திருமணம்…மணப்பெண் யாரென்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ