விமல் மீது தயாரிப்பாளர் மோசடி புகார்
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி என்பவர் ஐந்து கோடி ரூபாய் மோசடி புகார் அளித்துள்ளார்.
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து களவாணி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விமல். அந்தப் படத்தின் வெற்றியை அடுத்து கோலிவுட்டில் விமல் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக அவர் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன.
சமீபத்தில் அவர் நடித்த விலங்கு என்ற வெப்சீரிஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் விமலுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் ஒப்பந்தமாகியுள்ளன என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மீது தயாரிப்பாளர் ரூ 5 கோடி மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்,
“களவாணி, களவாணி-2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த விமல் மன்னர் வகையறா என்ற படத்தை எடுத்தபோது தன்னிடம் கடனாக ரூபாய் 5 கோடி வாங்கினார். அந்தப் படத்தின் லாபத்திலும் பங்கு தருவதாக என்னிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கதறி கதறி அழுத சஞ்சய் தத் - எதற்கு தெரியுமா?
ஆனால், இதுவரை என்னிடம் வாங்கிய கடன் தொகையை விமல் திருப்பித்தரவில்லை. அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடியை திருப்பித்தராமல் மோசடி செய்து வருகிறார்.
கொடுத்த பணத்தை கேட்டால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடி பணத்தை வசூலித்து தர வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR