ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி

திரையில் வருபவர்தான் ஹீரோவா கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா என இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் கூறியுள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 19, 2022, 06:14 PM IST
  • 21 வருடங்களுக்கு பிறகு ஹீரோவாகும் பாக்யராஜ்
  • 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட படம்
  • 3.6.9 படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு
 ஸ்க்ரீனில் வர்றவன்தான் ஹீரோவா - பாக்யராஜ் அதிரடி title=

இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். இவர் இயக்குநராக மட்டுமின்றி கதாநாயகன், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் நடித்த, இயக்கிய பெரும்பாலான படங்கள் அதிரிபுதிரி ஹிட்டடித்தவை. 

இவர் தற்போது நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘3.6.9’. பிஜிஎஸ் சரவணகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தை சிவமாதவ இயக்கியிருக்கிறார். கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக, இப்படமானது 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

Bhagyaraj

இந்நிலையில் இப்படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாக்யராஜ், “ 21 வருஷம் ஆச்சு என்று சொல்லி என்னை சங்கடப்படுத்திவிட்டார்கள்.ஸ்கீரினில் வருகிறவர்தான் கதாநாயகனா. கதை திரைக்கதை எல்லாம் சும்மாவா. அது இருந்தால்தான் ஹீரோ. 

நான் அவ்வப்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நான் எப்போதும் ஹீரோதான்.இதுவரை நான் கிறிஸ்தவர் கெட்டப் போட்டதில்லை. இந்தப் படத்தில்தான் முதல்முறை போட்டிருக்கிறேன்.

மேலும் படிக்க | வடிவேலு பாடிய Sing In The Rain - பின்னணி தெரியுமா?

இப்படம் சயின்ஸ் பிக்சன் என்றார்கள் இவர்கள் திட்டமிட்டது எல்லாம் பார்க்க பிரமிப்பாக இருந்தது. மிக கச்சிதமாக திட்டமிட்டு எடுத்தார்கள். இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

மேலும் படிக்க | பீஸ்ட் படத்தை பார்த்து கழுவி ஊற்றிய விஜய்யின் தந்தை!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News