தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சண்டக்கோழி’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சண்டக்கோழி : இன்றைய எபிசோட்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.15 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சண்டக்கோழி. 


இந்த சீரியலில் விக்ரம் தனது தம்பி விஜயையும் அவன் காதலிக்கும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க முயற்சிகள் செய்து வரும் நிலையில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்து விடலாம் என திட்டம் போட கார்த்திக் அந்த விஷயத்தை மகாவிடம் சொல்லி தடுத்து நிறுத்தி விட்டான். 


ஐஸ்வர்யாவின் பிறந்தநாள்: நடக்கும் ஏற்பாடுகள்


இதனை தொடர்ந்து வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, ஐஸ்வர்யாவிற்கு பிறந்த நாள் வர விக்ரம் விஜயை வைத்து கேக் கட் செய்து கொண்டாட வேண்டும் என திட்டம் போட மறுபக்கம் கார்த்திக் ஐஸ்வர்யாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாட ஏற்பாடுகள் செய்து விடுகிறான். 



மேலும் படிக்க | “நான் ரெடி” பாடலில் மாற்றம் செய்த படக்குழு..! எதிர்ப்புகள் வலுத்ததால் இந்த முடிவா..?


கேக் வெட்ட போகும் தருவாயில் விக்ரம் வானத்தில் ஹாப்பி பர்த்டே ஐஸ்வர்யா என வெடிக்க வைக்க அந்த நேரம் எல்லாரும் மேலே வேடிக்கை பார்க்க இந்த நேரத்தில் விஜயை அனுப்பி கேக்கை கட் செய்ய வைக்கிறான், பிறகு விஜய் தனது அண்ணனுக்கு நன்றி சொல்கிறான். 


விக்ரமுக்கு கார்த்தி மீது அதிகரிக்கும் சந்தேகம்


மேலும் விக்ரமுக்கு கார்த்தி மீது நாளுக்கு நாள் சந்தேகம் அதிகமாக ஒரு கட்டத்தில் விக்ரம் அவனை மடக்கி பிடித்து உண்மைகளை வெளியே வர வைத்து நிரூபிக்க முயற்சி செய்யும் போது அவன் அப்படியே எல்லாவற்றையும் மாற்றி பேசி விக்ரமை கெட்டவனாக மாற்றி விடுகிறான், பிறகு கங்கண கயிறு கட்டும் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் விக்ரம் என் தம்பி தான் கட்டுவான் என சொல்ல கார்த்தி நான் தான் கட்டுவேன் என நேரடியாக சவால் விடுகிறான். இதற்காக விக்ரமை குழப்பி விடும் வகையில் சதி வேலைகளை செய்கிறான். 



மேலும் படிக்க | ’நயன்தாராவே நகர்ந்து நிக்கனும்’ வெட்கத்தில் சொக்க வைக்கும் ஸ்ருதி ராஜ்


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே சண்டக்கோழி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்


சண்டக்கோழி : சீரியலை எங்கு பார்ப்பது?


சண்டக்கோழி சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | ‘கேப்டன் மில்லர்’ படத்தின் புதிய அப்டேட்: ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ