திரையரங்குகளில் வாரா வாரம் புதுப்புது படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் காதல், ஆக்‌ஷன் என பல வகையான படங்கள் வெளியாகின. இந்த வாரத்தில் ஜனவரி 25 மற்றும் 26ஆம் தேதிகளில் 7 படங்கள் வெளியாகின்றன. அப்படி, தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம், வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.சிங்கப்பூர் சலூன்:


ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள படம், சிங்கப்பூர் சலூன். துணை நடிகராக இருந்த ஆர்.ஜே.பாலாஜி பின்னர் தான் எழுதிய திரைக்கதையில் படங்களாக நடித்து வந்தார். இவர் நடித்த சிங்கப்பூர் சலூன் படம் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜிக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருக்கிறார். இதில், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளனர்.


2.ப்ளு ஸ்டார்:


ப்ளூ ஸ்டார் படத்தில் ஜெயகுமார் நடித்துள்ளார். இதில், அசோக் செல்வன், சாந்தனு பாக்கியராஜ், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் கதைகிரிக்கெட் வீரர்களை சுற்றி சுழல்வது போல அமைக்கப்பட்டுளது. இந்த படம், தனித்துவமான ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா பின்னணி இசை அமைத்துள்ளார். இப்படம, வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. 


3.தூக்குதுரை:


யோகி பாபு, இனியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், தூக்குதுரை. இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். மொட்ட ராஜேந்திரன், மகேஷ் சுப்புரமணியன், செண்ட்ராயன், பாலா சரவணன், கும்கி அஷ்வின் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம், வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. 


மேலும் படிக்க | குக் வித் கோமாளி சீசன் 5.. வெளியானது போட்டியாளர்களின் லிஸ்ட்


4.மலைக்கோட்டை வாலிபன்:


மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மோகன் லால் நடித்துள்ள படம், மலைக்கோட்டை வாலிபன். இப்படம், குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தை லிஜோ ஜோசி  பெல்லிசேரி இயக்கியுள்ளார். 


5.முடக்கருத்தான்:


சிறிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ளது, முடக்கருத்தான் திரைப்படம். இதனை வீரபாபு இயக்கியுள்ளார். இதில், பவா லக்‌ஷ்மனன், சூப்பர் சுப்புராயன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகிறது. 


6.லோக்கல் சரக்கு:


யோகி பாபு, தினேஷ் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் லோக்கல் சரக்கு. இந்த படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியுள்ளார். இமான் அண்ணாச்சி, வையாபுரி, வினோதினி உள்ளிட்டோர் இப்படத்தில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், வரும் 26ஆம் தேதி வெளியாகிறது. 


மேலும் படிக்க | அடேங்கப்பா..பிரபாஸின் ஸ்டண்ட் கலைஞருக்கு இவ்வளவு சம்பளமா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ