யோகி பாபுவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ

Yogi Babu Net Worth: தமிழ் சினிமாவின் தற்போது படு பிஸியான நடிகராக இருக்கும் யோகிபாபுவின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 9, 2023, 09:07 AM IST
  • யோகி பாபு சம்பள விவரம்.
  • யோகி பாபு சொத்து மதிப்பு எவ்வளவு.
  • சொத்து மதிப்பானது சுமார் 40 கோடி ருபாய் ஆகும்.
யோகி பாபுவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? யம்மாடியோ title=

நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு விவரம்: தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார், யோகி பாபு. இவரின் ஓட்டு மதிப்பு சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

நடிகர் யோகி பாபு:
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாபு. அந்த நிகழ்ச்சியில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் அமீர் ஹீரோவாக நடித்த யோகி படத்தில் ஒரு சிறிய நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படமே அவருடைய அடையாளப் பெயராக மாறியது. இதைத் தொடர்ந்து பையா, கலகலப்பு, அட்டகத்தி, சென்னை எக்ஸ்பிரஸ், சூது கவ்வும், வீரம், மான் கராத்தே, அரண்மனை, ஐ என அனைத்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் தவறாமல் பங்கு பெரும் முக்கிய நடிகராக மாறிவிட்டார் யோகி பாபு. இந்தி நடிகர் ஷாருக்கானில் இருந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் மற்றும் விஜய் வரை பலருடன் நடித்து விட்டார் யோகி பாபு (Actor Yogi Babu). ஆரம்பத்தில் வில்லன்களின் அடியாட்களில் ஒருவராகவும் கூட்டத்தில் ஒருவராகவும் இருந்தார். கலகலகப்பு படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பெரிய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு பிறகு இவரை பலரும் ‘பன்னி மூஞ்சி வாயன்’ நடிகர் என்று அழைத்தனர். கடந்த ஆண்டு வெளியான ‘லவ் டுடே’ படத்தில் உருவ கேலி, தன் தோற்றம் குறித்து பேசி மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘பொம்மை நாயகி’ படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தினார். 

மேலும் படிக்க | மல்டிபிளக்ஸில் லியோ படம் வெளியாகாதா? வெளியான அதிர்ச்சி தகவல்!

யோகி பாபு சம்பளம்: 
தற்போது தமிழ் சினிமாவின் (Tamil Cinema) பிஸி காமெடி நடிகனாக கையில் ஏகப்பட்ட படங்களுடன் இருக்கும் நடிகர் யோகி பாபுவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் நடிப்பதற்கு இவர் சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆனால் இறுதியாக நடித்த ஷாருக் கானின் (Actor Shahrukh Khan) ஜவான் படத்திலும் ஒரு பாத்திரத்தில் நடித்து, 45 லட்சம் ருபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.  சின்ன படங்களுக்கு லட்சங்களில் தொடங்கி பெரிய படங்களில் கோடியை தொடும் அளவுக்கு யோகி பாபுவின் சம்பளம் இருந்து வருகிறது.

யோகி பாபு சொத்து மதிப்பு:
இந்நிலையில் நடிகர் யோகி பாபுவின் முழு சொத்து மதிப்பு (Yogi Babu Net Worth) எவ்வளவு என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பானது சுமார் 40 கோடி ருபாய் அளவுக்கு இருக்கும் என இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SIIMA (@siimawards)

மேலும் படிக்க | Santhanam Net Worth: ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News