தெலுங்கு இயக்குனர் அனுதீப்.கே.வி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது SK20 என்ற படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷப்கா ஒப்பந்தம் ஆனார்.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். SK20  மூலம் சிவகார்த்திகேயன் படத்திற்கு முதன்முதலாக இசையமைக்கிறார் தமன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | SK20-ல் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை!


சுற்றுலா நகரமான புதுச்சேரியில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள் பட பிடிப்புகள் நடப்பது வழக்கம். இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புதுச்சேரியில் நடைபெறும் படபிடிப்பிற்கு நாள் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் நகராட்சி சார்பில் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  உயர்த்தப்பட்ட வரியை குறைக்ககோரி முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும்   மாவட்ட ஆட்சியர் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.



தற்போது சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டான் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இன்று வெளியாக வேண்டிய இப்படம் RRR படத்தின் காரணமாக மே மாதத்திற்கு தள்ளி போய் உள்ளது. மேலும் அயலான் படமும் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.  SK20 படத்தின் படப்பிடிப்பு பணிகள் 60 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரேம்ஜி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | எஸ்.கேவுக்கு வில்லனாக மாறிய பிரேம்ஜி! - என்னாச்சு?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR