அனைத்து திரையரங்குகளும் Master படத்துக்கு ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு
தியேட்டர் உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் வெளியீட்டு தேதியைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
Master Movie Updates: "மாஸ்டர்" படத்தின் தயாரிப்பாளர்களின் சமீபத்திய அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இணைந்து நடத்த மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை தியேட்டர்களில் மட்டுமே வெளியிடப்படும் எனவும், எந்த ஓடிடி தளங்களிலும் (OTT Platforms) வெளியாகாது என்று கூறியுள்ளனர்.
இந்த அறிவிப்பால் சந்தோஷம் அடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் (Screens in Tamil Nadu) வெளியீட்டு தேதியைப் பொருட்படுத்தாமல் மாஸ்டர் (Master) படத்துக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் வேறு எந்த புதிய படத்தையும் மாநிலத்தில் திரையிடப் போவதில்லை என்றும், படத்திற்கு எந்தப் போட்டியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளதாகவும் கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | சத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்.
மாஸ்டர் (Master Movie) போன்ற ஒரு பெரிய ஓபனிங் படத்தை வெளியிடுவது மூலம் எட்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டதால் ஏற்பட்ட நிதிநிலைமை சரிசெய்ய தியேட்டர் உரிமையாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் பெரும்பாலான முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை OTT தளங்களுக்கு விற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் தயாரிப்பாளர்கள் இந்த படத்தை பொங்கல் விடுமுறை (Pongal Holiday) நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு காரணம்.
ALSO READ | தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை
மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது.
தளபதி விஜய் (Vijay) நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய மாஸ்டர் (Master) திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் படம் நிச்சயமாக திரையரங்கில் மட்டுமே வெளியாகும் எனக்கூறியிருந்தார்.
ALSO READ | Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR