Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் ....

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாஸ்டர்.

Last Updated : Nov 30, 2020, 11:29 AM IST
    1. விஜய் (Vijay) கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார்.
    2. கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது.
    3. ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும்
Breaking: இந்த தேதியில் விஜய் மாஸ்டர் வெளியீடு - ஆனால் .... title=

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டை பலரும் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.  

இப்படத்தில் விஜய் (Vijay) கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி (Vijay Sethupathi) நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா (Covid-19) தொற்றினால் போடப்பட்ட ஊரடங்கு (Lockdown) காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ (Master) படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட் இங்கே, ரசிகர்கள் உற்சாகம்!

ALSO READ | சத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்..!

இதற்கிடையில் இந்த படம் OTT-யில் வெளியாகலாம் என்று பேசப்பட்டது. ஆனால் பிரபலங்கள் இந்த படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் சமீபத்தில், படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று செய்திக்குறிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டு இருந்தது. 

தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....!

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த படம் பொங்கல் 2021 போனஸாக வெளியாக இருக்கும் என்று நாங்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரிவித்திருந்தாலும் - அதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எங்களிடம் உள்ளன. வரும் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி படம் வெளியாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ALSO READ | தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News