சத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்..!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம் எது தெரியுமா?

Written by - ZEE Bureau | Last Updated : Nov 28, 2020, 01:04 PM IST
சத்தமில்லாமல் பெரிய விலைக்கு மாஸ்டர் படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்..!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பெரிய விலைக்கு வாங்கிய பிரபல OTT நிறுவனம் எது தெரியுமா?

தளபதி விஜய் (Vijay) நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கிய ரிலீசுக்கு தயாராக உள்ள படம் மாஸ்டர் (Master). விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படத்தின் வெளியீட்டை பலரும் எதிர்பாத்து காத்திருக்கின்றனர்.  

இப்படத்தில் விஜய் (Vijay) கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி (Vijay Sethupathi) நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ALSO READ | தளபதி விஜய் இன் 'மாஸ்டர்' டீசர் படைத்த சாதனை....!