ஜிவி பிரகாஷ் தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ் தற்போது கதாநாயகனாக பல படங்களில் கலக்கி வருகிறார். தற்போது இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது இவர் ராம் பாலா இயக்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு வில்லனாக பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்போதுமே காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த அந்த நடிகர் இப்போது முதல்முறையாக வில்லனாக நடிக்க உள்ளார். அவர் வேறு யாருமில்லை தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தான்.


மேலும் படிக்க | நடிப்பது 2 கோடிக்கு வாங்குவது 200 கோடி - சூப்பர் ஸ்டாரை சீண்டிய கங்கனா ரணாவத்



வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என பிஸியாக இருக்கும் வடிவேலு, அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விஜய் சேதுபதி நடிக்கும் படத்திலும் வடிவேலு கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகின.



இந்த நிலையில் முழுக்க முழுக்க காமெடி ரோல்லேயே நடித்து வரும் வடிவேலு தற்போது டெரர் வில்லனாக ஜிவி பிரகாஷ் படத்தில் நடிக்கிறார். இது மக்களை எந்த அளவுக்கு என்டர்டைன்மென்ட் செய்கிறது என்பது படம் வெளியானால் மட்டுமே தெரிய வரும்.


மேலும் படிக்க | இந்தியன் 2வில் களமிறங்கும் யுவராஜ் சிங் தந்தை - புகைப்படம் வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ