பீஸ்ட்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளைய தளபதி விஜய் நடிப்பில் சித்திரைத் திருநாளுக்கு முன்பாக ரிலீஸானது. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். சன்பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல படமாக இருந்தது. தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய இரு ஓடிடி தளங்களில் ரிலீஸாகியிருக்கிறது. 



ஜகமே தந்திரம்


தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். கேங்ஸ்டராக நடித்திருந்தார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருந்தது. நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உள்ளது.


மேலும் படிக்க | தெலுங்கு சினிமாவுக்கு இயக்குநர் சங்கர் சென்றது ஏன்? பின்னணி தகவல்


டாக்டர் 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்ற படம். இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு தான் பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பெற்றார். 



அண்ணாத்த


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரித்த படம். இந்தப் படத்தில் குஷ்பூ, மீனா மற்றும் கீர்த்தி சுரேஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்போது நெட்பிளிக்ஸிலும் இருக்கிறது. இதுவரை பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள்.


எதற்கும் துணிந்தவன்


சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், வினய் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். சன்பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் திரையிட்டது. ஒடிடியில் நெட்பிளிக்ஸில் இருக்கிறது. 


இதுதவிர, மண்டேலா, நவரசா மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களும் நெட்பிளிக்ஸில் இருக்கின்றன.


மேலும் படிக்க | பிரியங்கா சோப்ராவுக்கு முகத்தில் காயம் - என்ன ஆச்சு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR