விஜய் சேதுபதிக்கே டஃப் கொடுக்கும் இரண்டு படங்கள்!
விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ஹீரோக்களில் முதலிடத்தில் உள்ளவர் விஜய் சேதுபதி. தன் கைவசம் எப்போதுமே கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டு வாரத்தில் மூன்று படங்கள் வெளியானது. கதாநாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கடைசி விவசாயி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | தொடங்கியது ஏகே 61 ஷூட்டிங்... பிரைவேட் ஜெட்டில் பறந்த அஜித்
சமீபகாலமாக விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படங்கள் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை. இதனால் விஜய் சேதுபதி காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை நம்பியிருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பேரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சிறிது தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீஸர் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னிலையில் அதே தினத்தில் மேலும் இரண்டு படங்களும் வெளியாக உள்ளன. அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ் நடித்த ஹாஸ்டல் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. மேலும் வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப் நடித்த கதிர் படமும் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏப்ரல் 13 மற்றும் 14 தேதிகளில் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 படங்கள் வெளியாக உள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் இந்தப்படமும் வெளியாகாமல் ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்த படங்கள் வர உள்ளது.
மேலும் கமலின் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 3-ம் தேதி வெளிவரவுள்ளது, இதற்கிடையில் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருக்கும் மாமனிதன் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்களும் இதற்கிடையில் வெளிவர உள்ளது.
மேலும் படிக்க | பிரபாஸின் அமெரிக்க பயணம் - ஹாலிவுட் படத்திற்கா இல்லை அறுவை சிகிச்சைக்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR