Tamil TV Serial Valliyin Velan Promo: வெள்ளித்திரைக்கு இணையாக சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களத்தில் இறக்கி வருகிறது. நினைத்தேன் வந்தாய், நெஞ்சத்தை கிள்ளாதே ஆகிய சீரியல்களை தொடர்ந்து மதிய வேளையில் டப்பிங் சீரியல்களை சமீபத்தில் ஒளிபரப்ப தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனை தொடர்ந்து வரும் திங்கள் ( செப்டம்பர்   2 ) முதல் வள்ளியின் வேலன் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிப்பரப்பாக உள்ளது. திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்து பிரபலமான சித்து மற்றும் ஷ்ரேயா திருமணத்திற்கு மீண்டும் ஒன்றாக இணைந்து இந்த சீரியலில் நடிக்க உள்ளனர்.


அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் வள்ளிக்கு ஆறுதலாக துணையாக நிற்கும் வேலனின் கதை தான் இந்த வள்ளியின் வேலன். இது குறித்த ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.


இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நினைத்தேன் வந்தாய் சீரியல் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதே போல் இதுவரை 6 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் இனி 6:30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய சீரியலுடன் புதிய நேரத்தில் பழைய சீரியல்களையும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


மேலும் படிக்க - நினைத்தேன் வந்தாய் அப்டேட்: ரவுடியை நினைத்து அலறும் மனோகரி.. அதிர்ச்சி கொடுத்த எழில்


மேலும் படிக்க - தலை முழுகிய ராமசந்திரன், தனிமரமாக நிற்கும் மாறன்.. வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்


மேலும் படிக்க - அவன் உயிர் என் கையில் தான்.. பிஸ்டலை கையில் எடுத்த ஷண்முகம்.. அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்


மேலும் படிக்க - ஆண்டாள் கழுத்தில் தாலி கட்டி சிக்கிய அழகர்... பரபரப்பில் “இதயம்” சீரியல் இன்றைய எபிசோட்


மேலும் படிக்க - கார்த்திகை தீபம் அப்டேட்: முகத்திரையை அகற்றிய ரியா.. அதிர்ச்சி அடைந்த அம்பிகா.. அடுத்து என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ