வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயரிப்பில், சூரி நடிப்பில் கடந்த வெள்ளிகிழமையன்று (மார்ச் 31) அன்று உலகம் முழுவதும் வெளியான படம் 'விடுதலை-1'.  இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படம் வயது வந்தோருக்கான 'ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கணப்படுகிறது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். 


விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் ஏறத்தாழ 90% நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கௌதம் கார்த்திக்கின் 1947 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!


மேலும் இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என கூறப்பட்ட போதிலும், திரைக்கதையில் பல்வேறு பணிகளை இப்படத்தின் எழுத்துக்குழு செய்துள்ளது. மேலும், படத்தின் மீது தொழில்நுட்ப ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் பல்வேறு எதிர்கருத்துகள் முன்னிறுத்தப்பட்டாலும், அவை படத்தின் வசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என கூறலாம். 


மேலும், படத்தின் இரண்டாம் பாகம் ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது. எனவே, முதல் பாகத்தின் வசூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 'விடுதலை-1' படம் வெளியான முதல் மூன்றே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.14 கோடியும், உலகளவில் ரூ.23 கோடியும் வசூல் சாதனை புரிந்ததாக கூறப்பட்டது. 


இந்நிலையில், படம் வெளியாகி முதல் ஆறு நாள் வசூல் குறித்த விவரம் (ஏப். 5ஆம் தேதி வரையிலான நிலவரம்) வெளியாகியுள்ளது. ஆறாம் நாள் நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22.35 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலகளவில் ரூ. 29.50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையில், விடுதலை படக்குழு அதன் முதல் பாகத்தின் வெற்றி விழாவை சென்னையில், நேற்று (ஏப். 6) கொண்டாடியுள்ளது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இப்படத்தில் நடித்துள்ள ஒளிப்பதிவாளரும், இயக்குநனருமான ராஜீவ் மேனன் ஆகியோர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | பேச்சுலர் படத்தில் திவ்யபாரதிக்கு பதில் நடிக்கவேண்டியது இந்த நடிகையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ