விடுதலை படத்தில் நடித்த சூரிக்கு இவ்வளவு தான் சம்பளமா?

'விடுதலை' படத்திற்காக கடினமாக உழைத்த நடிகர் சூரிக்கு, வெற்றிமாறனும், எல்ரெட் குமாரும் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாக பரவி வருகிறது.   

Written by - RK Spark | Last Updated : Apr 5, 2023, 07:57 AM IST
  • 'விடுதலை-2' படத்தின் மீதமுள்ள பணிகள் மே மாதம் முடிவடையும்.
  • 'விடுதலை-2' படம் இந்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும்.
  • சூரிக்கு ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
விடுதலை படத்தில் நடித்த சூரிக்கு இவ்வளவு தான் சம்பளமா? title=

வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயரிப்பில், சூரி நடிப்பில் கடந்த வெள்ளிகிழமையன்று உலகம் முழுவதும் வெளியான படம் 'விடுதலை-1'.  இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் சிறந்த வரவேற்பை பெற்றது.  'விடுதலை-1' படம் வெளியான மூன்றே நாட்களில் தமிழகத்தில் ரூ.14 கோடியும், உலகளவில் ரூ.23 கோடியும் வசூல் சாதனை புரிந்துள்ளது.  சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது.  படத்தின் முதல் பாக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் கிட்டத்தட்ட 90% நிறைவடைந்து விட்டது.

மேலும் படிக்க | என்னுடைய இந்த கனவு நினைவேறாமல் உள்ளது! வருத்தத்துடன் தெரிவித்த ரஜினிகாந்த்!

'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகள் மே மாதத்தில் முடிவடையும் என்றும், இப்படம் இந்த ஆண்டில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.  இப்படத்தின் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் போன்ற நட்சத்திரங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் சூரி நகைச்சுவை குணம் கொண்ட அப்பாவி கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார், இப்படத்தில் சூரியின் நடிப்புக்கு வெகுவாக பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.  இதில் சூரி தனது உயிரை பணையம் வைக்கும் அதிரடி காட்சிகளுக்கு திரையரங்கில் விசில் பறந்தது.  

'விடுதலை' படத்திற்காக கடினமாக உழைத்த நடிகர் சூரிக்கு, வெற்றிமாறனும், எல்ரெட் குமாரும் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் தீயாக பரவி வருகிறது. மேலும் 'விடுதலை' படத்தில் கதாநாயகனாக நடித்ததை கௌரவமாக கருதி, சூரி குறைவான தொகையை சம்பளமாக பெற்றுக்கொண்டார் என சில தகவல்கள் தெரிவிக்கிறது.  இருப்பினும் படக்குழு இந்த செய்தியை மறுத்துள்ளது, விடுதலை படத்தின் இரண்டு பாகங்களில் நடித்ததற்கு நடிகர் சூரிக்கு நல்ல அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 4 மெகா ஹிட் சீரியலை நிறுத்தப் போகும் விஜய் டிவி..காரணம் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News