அஜித் - விஜய் படங்களான துணிவும், வாரிசும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன. ஹவுஸ்புல் காட்சிகள், ரசிகர்கள் கொண்டாட்டம் என திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கிறது. இந்த இரண்டு படங்களில் அதிக கலெக்‌ஷனை எந்தப்படம் அள்ளப்போகிறது என்பது தான் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை. இந்தச்சூழலில் அஜித் - விஜய் சினிமா பயணத்தில் இவர்கள் இருவரின் படங்களும் இதற்கு முன் ஒன்றாக வெளியானது எப்போது? அந்தப்படங்களில் வெற்றி மகுடம் சூடியது யார் என்பதை தற்போது பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வான்மதி - கோயமுத்தூர் மாள்பிள்ளை


1996-ம் ஆண்டு தான் முதல்முறையாக அஜித் - விஜய் படங்கள் ஒன்றாக வெளியானது. அஜித்தின் வான்மதி படமும், விஜய்யின் கோயமுத்தூர் மாப்பிள்ளை படமும் வெளியானது. பொங்கல் ஸ்பெஷல் படங்களாக வெளியான இந்த இரண்டு படங்களில் வான்மதி 175 நாட்கள் தியேட்டரில் ஓடியது. கோயமுத்தூர் மாபிள்ளை படமும் ஹிட் ஆனது. 


கல்லூரி வாசல் - பூவே உனக்காக


1996 தான் விஜய் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டு. என்ன தான் இதற்கு முன் விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த ஆண்டு வெளியான பூவே உனக்காக படம் தான் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. சொல்லப்போனால் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படமும் இது தான். விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் அமைதியான ரோலில் நடித்து பெண்களின் பேவரைட் நாயகனாக விஜய் மாறினார். இந்தப்படம் வெளியான அதே நாளில் தான் அஜித்தின் கல்லூரி வாசல் படமும் வெளியானது. பிரசாந்த் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். ஆனால் இந்தப்படம் பிளாப் ஆனது. பூவே உனக்காக படம் 250 நாட்கள் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடியது. 


ரெட்டை ஜடை வயசு - காதலுக்கு மரியாதை 


1997-ம் ஆண்டு அஜித்தின் ரெட்டை ஜடை வயசும், விஜய்யின் காதலுக்கு மரியாதை படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் ரெட்டை ஜடை வயசு படம் தோல்வியடைந்தது. ஆனால் காதலுக்கு மரியாதை படம் மெகா ஹிட் ஆனது. இந்தப்படம் விஜய்யின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியது. இப்போது வரை தமிழில் வெளியான பெஸ்ட் காதல் படங்களில் நிச்சயம் இந்தப்படத்துக்கு ஸ்பெஷல் இடமுண்டு.


உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - நிலவே வா


1998-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜய்யின் நிலவே வா படமும், அஜித்தின் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படமும் வெளியானது. அஜித் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் தான் நடித்திருப்பார். ஹீரோ நடிகர் கார்த்திக் தான். விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் ஆனது. ஆனால் நிலவே வா சுமார் ரகம் தான். 


உன்னைத்தேடி - துள்ளாத மனமும் துள்ளும்


1999-ம் ஆண்டு அஜித்தின் உன்னைத்தேடி படமும், விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும் படமும் ஒரு வார கேப்பில் வெளியானது. இதில் உன்னைத்தேடி ஹிட் ஆனாலும், துள்ளாத மனமும் துள்ளும் படம் அன்றைய இளைஞர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப்படத்தில் முதலில் நடிகர் வடிவேலுவை தான் ஹீரோவாக்க இயக்குநர் எழில் முயற்சித்தாராம். ஆனால் ஒருசில காரணங்களால் படம் விஜய்யிடம் சென்றுள்ளது. 


உன்னைக் கொடு என்னை தருவேன் - குஷி 


2000-ம் ஆண்டு குஷி படமும், உன்னைக் கொடு என்னை தருவேன் படமும் வெளியானது. இதில் குஷி மீண்டும் விஜய்க்கு பிளாக் பஸ்டராக அமைந்தது. ஆனால் உன்னைக்கொடு என்னை தருவேன் படு தோல்வியை சந்தித்தது. 


தீனா - பிரண்ட்ஸ் 


தொடர்ந்து அஜித் படங்கள் சொதப்பினாலும், 2001-ம் ஆண்டு வெளியான தீனா படம் பட்டையை கிளப்பியது. இந்த படத்துக்குப் பிறகு தான் அஜித்துக்கு தல என்ற பட்டம் கிடைத்தது. இந்தப்படத்துடன் விஜய்யின் பிரண்ட்ஸ் படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் தான். 


மேலும் படிக்க | வாரிசா? துணிவா? பொங்கல் வெற்றியாளர் யார்?


வில்லன் - பகவதி 


2002-ம் ஆண்டு அஜித்தின் வில்லன் படமும், விஜய்யின் பகவதி படமும் வெளியானது. இதில் வில்லன் படம் பிளாக் பஸ்டர். பகவதி படம் ஓரளவுக்கு ஹிட் ஆனது. 


ஆஞ்சநேயா - திருமலை


இந்த வெற்றியை தொடர்ந்து 2003-ம் ஆண்டு அஜித்தின் ஆஞ்சநேயாவும் விஜய்யின் திருமலையும் ஒன்றாக ரிலீஸ் ஆனது. இதில் திருமலை ஹிட் ஆனது. ஆஞ்சநேயா மிகப்பெரிய அளவில் விமர்சனத்துக்கு ஆளானது. 


பரமசிவம் - ஆதி 


அடுத்து 3 ஆண்டுகள் கழித்து தான் விஜய்-அஜித் படங்கள் ஒன்றாக வெளியானது. 2006-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் பரமசிவம் படமும், விஜய்யின் ஆதி படமும் வெளியானது. இதில் பரமசிவம் சுமார் ஹிட் ஆனது. ஆதி பிலோ ஆவரேஜ் தான். 


ஆழ்வார் - போக்கிரி


2007-ம் ஆண்டு விஜய்யின் போக்கிரியும், அஜித்தின் ஆழ்வாரும் வெளியானது. இந்தமுறை அஜித் ரசிகர்கள் கூட விஜய்யின் படத்துக்கு போட்டி போட்டு டிக்கெட் வாங்கி சென்றனர். விஜய்யை மாஸ் ஹீரோவாக அடுத்தகட்டத்துக்கு உயர்த்தியது போக்கிரி தான். அப்படி ஒரு சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் ஆழ்வார் வந்த இடம் தெரியாமல் மறைந்தது. 


வீரம் - ஜில்லா 


அதன்பிறகு 7 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் அஜித்தின் வீரம் படமும்,விஜய்யின் ஜில்லா படமும் வெளியானது. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் அசத்தியது. 


துணிவு - வாரிசு


தற்போது மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து துணிவு, வாரிசு ஆகிய படங்கள் வெளியாகியுள்ளது. எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை அஜித் - விஜய் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களில் எந்தப்படம் கலெக்‌ஷனில் முந்தும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப்படங்களின் கலெக்‌ஷன் அப்டேட் அடுத்த வார இறுதிக்குள் தெரிந்துவிடும். இன்றாக வெளியான அஜித் - விஜய் படங்களில் அதிகம் ஹிட் கொடுத்தது விஜய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ