தாய், தந்தையை தனியாக தவிக்கவிட்ட விஜய்?
எஸ்.ஏ. சந்திரசேகர் நேற்று தனியாக பிறந்தநாள் கொண்டாடியதை அடுத்து விஜய் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்திருக்கிறது.
கோலிவுட் வசூல் மன்னர்களில் ஒருவர் விஜய். தற்போது மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருக்கும் விஜய்க்கு, அவருடைய ஆரம்பகாலத்தில் துணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.
விஜய்யை நடிகராக அறிமுகம் செய்து அவருக்காக பல படங்களை இயக்கி, மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்டு தேர்வு செய்வது என முழுதாக அவருடனேயே இருந்தார். இதனையடுத்து விஜய்யும் தனது திறமையை திறம்பட வெளிக்காட்ட ஏகப்பட்ட படங்கள் ஹிட்டடித்தன.
அதனைத் தொடர்ந்து படிப்படியாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் மனஸ்தாபம் நீடிப்பதாக இடை இடையே தகவல்களும் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும்விதமாக; தன் பெயரை பயன்படுத்தி கூட்டம் நடத்தக்கூடாது என நீதிமன்றத்தில் தாய், தந்தை மீது வழக்கும் தொடர்ந்தார்.
மேலும் படிக்க | எக்ஸாம் ஹாலில் பவர் கட்! - செல்போன் டார்ச்சில் தேர்வு எழுதிய மாணவர்கள் வீடியோ!
சூழல் இப்படி இருக்க பீஸ்ட் பட ப்ரோமோஷனில் தந்தை குறித்து அன்புடனும், பாசத்துடனும் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கிவிட்டதாக கருதப்பட்டது.
மேலும் படிக்க | 2022-ல் இதுவரை பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்கள் இவைதான்!
இந்நிலையில் எஸ்.ஏ. சந்திரசேகர் நேற்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில் அவரது மனைவி ஷோபா கணவருக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் வெளியாகின. இதனைக் கண்ட நெட்டிசன்கள், விஜய் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டாரா என்று கேள்வி எழுப்ப தொடங்கினர்.
மேலும், வயதான காலத்தில் தந்தையும், தாயும் தனியாக பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். அவர்களுடன் விஜய் தன் குடும்பத்துடன் இருந்திருக்க வேண்டாமா. தந்தை, தாயை கவனியுங்கள் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்யும் அவர்தான் அதன்படி முதலில் நடக்க வேண்டும் எனவும் பதிவிட்டுவருகின்றனர்.
அதேசமயம், விஜய்யை குறை கூறுபவர்களில் எத்தனை பேருக்கு தன்னுடைய தாய், தந்தையின் பிறந்தநாள் ஞாபகம் இருக்கும் எனவும் எதிர்கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | திரும்பி வந்துட்டேனு சொல்லு..! 6 மாதத்தில் வெளியாகும் சிம்புவின் 3 படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR