துபாய்: நீங்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் திட்டமோ அல்லது அங்கு இடமாற்றமாகும் திட்டமோ இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கான விசாவிற்கு ஸ்பான்சர் செய்ய நீங்கள் இனி நிறுவனம், தனிநபர், விமான நிறுவனம் அல்லது ஹோட்டல்களை தேடி அலையத் தேவையில்லை. ஐக்கிய அரபு அமீரகம் புதிய விசா வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அமீரகம் அதன் விசா முறையை அக்டோபர் 3, 2022 முதல் புதுப்பித்துள்ளது. இதனால், விசா பெற, பின்வரும் குடியிருப்பு மற்றும் வருகை விசா விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் இப்போது பரிசீலிக்கலாம், அதற்கு நீங்களே விண்ணப்பிக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. கோல்டன் விசா


கோல்டன் ரெசிடென்ஸ் என்பது 10 வருட குடியிருப்பு விசா ஆகும். இது பின்வரும் வகைகளுக்கு வழங்கப்படுகிறது:


• முதலீட்டாளர்கள்
- பொது முதலீடு
- ரியல் எஸ்டேட் முதலீடு


• தொழில்முனைவோர்
- பதிவு செய்யப்பட்ட வெற்றிகரமான ஸ்டார்ட் அப்-பின் உரிமையாளர்
- ஒரு ஸ்டார்ட் அப்புக்கான அங்கீகரிக்கப்பட்ட யோசனை
- அமீரகத்துக்கு உள்ளே அல்லது வெளியே விற்கப்பட்ட வெற்றிகரமான ஸ்டார்ட் அப்பின் முந்தைய நிறுவனர்


• விதிவிலக்கான திறமைகள்


- கலை மற்றும் கலாச்சாரம் 
- டிஜிட்டல் தொழில்நுட்பம்
- கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புதுமுறை காண்போர்
- விளையாட்டு
- பிற முக்கிய புலங்கள்


• விஞ்ஞானிகள் & தொழில் வல்லுநர்கள்
- விஞ்ஞானிகள்
- தலைமை நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள்
- அறிவியல் வல்லுநர்கள்
- பொறியியல் வல்லுநர்கள்
- விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள்
- சுகாதார வல்லுநர்கள்
- கல்வி வல்லுநர்கள்
- வணிக மற்றும் நிர்வாக வல்லுநர்கள்
- தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள்
- சட்ட, சமூக மற்றும் கலாச்சார வல்லுநர்கள்


• சிறந்த மாணவர்கள் & பட்டதாரிகள்
- மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்கள்
- அமீரக பல்கலைக்கழகங்களில் சிறந்த பட்டதாரிகள்
- உலகளவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள்


• மனிதாபிமான முன்னோடிகள்
- சர்வதேச மற்றும் பிராந்திய அமைப்புகளின் புகழ்பெற்ற உறுப்பினர்கள்
- பொது நலன் சங்கங்களின் சிறந்த உறுப்பினர்கள்
- மனிதாபிமான துறைகளில் அங்கீகார விருதுகளைப் பெற்றவர்கள்
- மதிப்பிற்குரிய தன்னார்வலர்கள் மற்றும் மனிதாபிமான முயற்சிகளின் ஆதரவாளர்கள்


• முன்னணி ஹீரோக்கள்
- கோவிட்-19 தொற்றுநோய் போன்ற நெருக்கடியில் அசாதாரண முயற்சிகளைக் கொண்ட முன்னணி ஊழியர்கள்


நன்மைகள்


கோல்டன் விசா இருந்தால், நீங்களே உங்களுக்கு ஸ்பான்சர் செய்யலாம். இது தவிர இதில் பின்வரும் நன்மைகளும் உள்ளன: 


- ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்கத்தக்கது.
- ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வெளியே தங்கியிருக்கும் கால அளவு கோல்டன் ரெசிடென்ஸை ரத்து செய்யாது. பொதுவாக, ஆறு மாதங்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வெளியே தங்கியிருப்பது குடியிருப்பு விசாவை செல்லாத விசா ஆக்கிவிடும். 
- ஸ்பான்சர் அல்லது முதலாளி தேவையில்லை.
- வயது வரம்பு இல்லாமல், மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்களுக்கான குடியிருப்பு.
- ஸ்பான்சர் செய்யக்கூடிய அதிகபட்ச வீட்டு உதவியாளர்களுக்கு வரம்பு இல்லை.
- கோல்டன் ரெசிடென்ஸின் அசல் விசா வைத்திருப்பவர் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடியிருப்பு அனுமதி முடியும் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்து கோல்டன் விசா விண்ணப்ப செயல்முறையை முடிக்க ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் சிறப்பு பல நுழைவு விசா வழங்கப்படும்.


மேலும் படிக்க | NRI News: நிம்மதியான ரிடையர்ட் வாழ்க்கை வேண்டுமா? இதில் முதலீடு செய்யுங்கள் 


2. குடியிருப்பு விசா


ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையின் அறிவிப்பின்படி, பின்வரும் குடியிருப்பு விசா வகைகளுக்கு உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லை:


- தொலைதூர வேலை (Remote work residence) குடியிருப்பு (ஒரு வருட விசா)


- ஓய்வு பெற்ற குடியிருப்பு ( Retirement residence) (ஐந்தாண்டு விசா)


- ரியல் எஸ்டேட் உரிமையாளர்களின் குடியிருப்பு (இரண்டு ஆண்டுகள்)


3.கிரீன் விசா


ஐந்து வருட கிரீன் விசா பின்வரும் வகைகளுக்குக் கிடைக்கிறது:


1. ஃப்ரீலான்ஸர்கள்


2. திறமையான ஊழியர்கள்


3. முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள்


இந்த அனைத்து வகைகளின் கீழும் விண்ணப்பதாரர்கள் சுய ஸ்பான்சர்ஷிப்பில் விசாவைப் பெறலாம்.


4. ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசா


ஸ்பான்சர் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான ஐந்து வருட சுற்றுலா விசாவையும் பெற முடியும். எனினும், நீங்கள் தங்கியிருக்கும் போது அமீரகத்தில் செல்லுபடியாகும் சுகாதார காப்பீட்டின் நகலையும் உங்கள் வங்கி அறிக்கையின் நகலையும் (கடந்த ஆறு மாதங்களில் கணக்கில் குறைந்தபட்சம் 4,000 டாலர் (14,692 திரம்) அல்லது வெளிநாட்டு நாணயங்களில் அதற்கு சமமான தொகை கணக்கில் இருக்க வேண்டும்) அளிக்க வேண்டும். 


5. உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க வருகை விசா


இந்த மாதம் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விசாக்கள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லாமல், பல விசிட் விசா வகைகளுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களைப் பார்ப்பதற்கான விசிட் விசாவும் இதில் அடங்கும்.


6. வேலை தேடுபவர்களுக்கான விசா


வேலை வாய்ப்புகளை ஆராய விசிட் விசாவிற்கு உள்ளூர் ஸ்பான்சர் தேவையில்லை. இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் இரண்டு மாத, மூன்று மாத அல்லது நான்கு மாத விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். 


7. வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கான விசிட் விசா


வணிக வாய்ப்புகளை ஆராய்வதற்கான விசிட் விசாவிற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் அல்லது தனிநபர் ஸ்பான்சர் தேவையில்லை. 


மேலும் படிக்க | NRI News: இரட்டை வரி விதிப்பை எளிதாக தவிர்க்கலாம், விவரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ