வெளிநாடு வாழ் இந்தியர்களின் மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. வெளிநாடுகளிலிருந்து என்ஆர்ஐ-கள் பணம் அனுப்பும் எண்ணிக்கையிலும் கேரளாதான் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த என்ஆர்ஐகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த நிலை விரைவில் மாறக்கூடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் என்ஆர்ஐ மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது பிரபலமான கருத்தாக உள்ளது என்றும், கேரளம் பணம் அனுப்பும் வரவுகளின் பாரம்பரிய பயனாளியாக இருப்பதால் இது ஓரளவு உண்மை என்றும் (2017 இல் ஜிஎஸ்டிபியில் 10%), ஆனால் இது மாற வாய்ப்புள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். என்ஆர்ஐ ரெமிடன்ஸ் பற்றிய ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் ஆய்வுக் குறிப்பிலும் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2020 ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50% குடியேற்றங்கள் உத்தரபிரதேசம், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற வட மாநிலங்களில் இருந்து வந்ததாக சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வை ஆய்வுக் குறிப்பு மேற்கோள் காட்டியுள்ளது.


மேலும் படிக்க | India-UAE: அதிக விமான கட்டணத்தை எதிர்த்து NRI நீதிமன்றத்தில் மனு! 


வளைகுடா மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே ஊதிய வேறுபாடுகள் குறைவதால் இந்த மாற்றம் காணப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள். 


கேரளா, கர்நாடகாவில் பணப் பரிமாற்றம் குறைகிறது


அறிக்கையின்படி, கேரளா (FY21 இன் படி 7.5%) மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் GSDP-யில் பணம் அனுப்பும் பங்கு குறைந்து வருகிறது. மாறாக, வட மாநிலங்களில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணம் அனுப்பும் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.


மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஜி.எஸ்.டி.பி.யில் பணம் செலுத்துவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. கடுமையான கோவிட் தாக்கம் மற்றும் 21 ஆம் நிதியாண்டின் போது ஜி.எஸ்.டி.பி-யின் கடுமையாக வீழ்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுக் குறிப்பு கூறுகிறது.


ரிசர்வ் வங்கியின் ஆய்வில் கவனிக்கப்பட்ட மற்றொரு போக்கு, பணம் அனுப்பும் வரவுகளில் வட அமெரிக்காவின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


"அமெரிக்கா இப்போது ரெமிடென்சுகளில் மிகப்பெரிய தனிப்பட்ட நாடாக (மொத்தத்தில் 23.4%) உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பின்னுக்கு தள்ளி 18% ஆக உள்ளது. இது, பொதுத்துறை வங்கிகளில் இருந்து தனியார் துறை வங்கிகளுக்கும் (53% சந்தைப் பங்கு) மற்றும் இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் பணம் அனுப்பும் பங்கை மாற்றியமைக்கலாம்” என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


ஆக்சிஸ் ஏஎம்சி குறிப்பின்படி, இந்திய நாணயத்தின் தற்போதைய வீழ்ச்சி என்ஆர்ஐ -களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் டாலர் சொத்துக்களை ஈர்க்கும் பிரச்சாரங்களை வங்கிகள் முடுக்கி விடுவதற்கான வாய்ப்பாகும்.


மேலும் படிக்க | இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகரிக்கும் NRI முதலீடுகள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ