India-UAE: அதிக விமான கட்டணத்தை எதிர்த்து NRI நீதிமன்றத்தில் மனு!

இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான விமானங்களில் விமான கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால், அரபு நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனு தாரர் குறிப்பிட்டுள்ளார்.

Last Updated : Aug 28, 2022, 05:53 PM IST
  • இந்தியா -அரபு நாடுகளுக்கு இடையிலான விமான கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
  • டெல்லியின் கேரள வெளிநாடு வாழ் இந்தியர்கள் சங்கம் சமர்ப்பித்த மனு.
India-UAE: அதிக விமான கட்டணத்தை எதிர்த்து NRI நீதிமன்றத்தில் மனு! title=

இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான விமானங்களில் விமான கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக விசாரணை செய்த தில்லி உயர் நீதி மன்றம்,  சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இந்த விஷயத்தில் பிரநிதிகளுடன் பேச்சு நடத்துமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கோரியுள்ளது.

டெல்லியின் கேரள வெளிநாடு வாழ் இந்தியர்கள் சங்கம் சமர்ப்பித்த மனுவில், 1937 விமான விதிகளின் விதி 135(1) தெளிவற்றதாக, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று கூறி அதை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளது. வளைகுடா பிராந்திய நாடுகளில் இருந்து கேரளா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கு விமான சேவையை வழங்கும் விமான நிறுவனங்கள், கட்டணங்களை  மிக அதிக அளவில் வசூலித்து வருவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!

இதன் விளைவாக,  வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் கல்வி ஆகிய காரணங்களுக்காக, அரபு நாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்திய குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மனு தாரர் குறிப்பிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், KMNP சட்டத்தின் நிர்வாகப் பங்காளருமான குரியாகோஸ் வர்கீஸ், NRI குழுவின் சார்பாக மனுவை சமர்ப்பித்தார்.

வர்கீஸ் இது குறித்து கூறுகையில் “எங்கள் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்யாதது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு பதிலாக, டிஜிசிஏவுடன் பேசுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் அளிக்கும் பதிலின் அடிப்படையில், இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இருப்பினும், இதுபோன்ற மனுக்கள் இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், பல நீதிமன்றம் எடுத்துக் கொள்ளவில்லை என்று வர்கீஸ் கூறினார். பல மத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சமூக அமைப்புகள், பயண முகமைகள் மற்றும் பிற இலாப நோக்கற்ற அமைப்புகளும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தன. ஆனால் பலனளிக்கவில்லை. இது பொருளாதாரத்துடன் இணைந்த சட்ட விஷயம் ” என்று வர்கீஸ் இது குறித்து மேலும் கூறினார்.

“இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான பீக் சீசன் விமானக் கட்டணம் 1,500 முதல் 3,000 திர்ஹம் வரை உயரலாம். கேரளத்திற்கான விமான கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன” என்று கேரள பிரவாசி சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் வெள்ளபாலத் கூறினார். 

வர்கீஸ் இது குறித்து மேலும் கூறுகையில் விமான கட்டணங்கள் குறித்து, இரு நாடுகளும் இருதரப்பு விவாதங்களில் ஈடுபடும்போது, ​​அந்தத் துறைகளுக்கு இடையே பயணிக்கும் பயணிகளிடம் என்ன வகையான கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்பதை சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகக் குழு தீர்மானிக்க முடியும். டிக்கெட் விலையில் அரசாங்கம் குறைந்தபட்சம் அல்லது அதிகபட்ச வரம்பை வைக்கலாம் என்று மேலும் கூறினார். “கோவிட்-19 உச்சகட்டத்தின் போது உள்நாட்டு விமானங்களின் விலையை அரசாங்கம் கட்டுப்படுத்தியது. சர்வதேச விமான நிறுவனங்களுக்கும் இதை ஏன் செய்ய முடியாது, ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News