ஷார்ஜாவில் ஜனவரி 1, 2024 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் தடை செய்யப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கான ஆயத்தமாக, இந்த ஆண்டு அக்டோபர் 1 முதல், அமீரகத்தில் உள்ள விற்பனை நிலையங்கள், நுகர்வோர் கேட்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் 25 ஃபில்ஸ் வசூலிக்கும்.
ஜனவரி 1, 2024 முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை வர்த்தகம் செய்வது, உற்பத்தி செய்வது, வழங்குவது அல்லது இறக்குமதி செய்வது ஆகியவை தடை செய்யப்படும். ஷார்ஜா நிர்வாகக் குழுவால் வெளியிடப்பட்ட தீர்மானத்தின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் மற்றும் பல உபயோகப் பைகள் (மல்டி யூஸ் பேக்ஸ்) கடைக்காரர்களுக்கு வழங்கப்படும்.
பிளாஸ்டிக் மாசுபாட்டின் அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதே இந்த தீர்மானத்தின் நோக்கமாகும். இது முற்றிலும் தடைசெய்யப்படும் வரை ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைக்கப்பட்டு மக்களிடையே, சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பழக்கம் ஊக்குவிக்கப்படும்.
மேலும் படிக்க | NRI News: கனடா நாட்டின் திறமைக்கான ஆதாரமாக மாறி வரும் இந்தியா!
பல பயன்பாட்டு பைகளின் பயன்பாடு நிலைத்தன்மையின் தரங்களால் நிர்வகிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள். இந்த பைகள் நகராட்சி விவகாரங்கள் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு உட்பட்டதாக இருக்கும்.
விற்பனை நிலையங்கள் 25-ஃபில் கட்டணத்தைப் பற்றி நுகர்வோருக்கு தெரிவிக்கவும், அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாற்று வழிகளைப் பயன்படுத்த வழிகாட்டவும் வேண்டும். அத்தகைய பைகளின் நுகர்வை கடைகளும் குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த தடையை அமல்படுத்துவதற்கான திட்டங்களையும், கொள்கைகளையும் வகுக்கும் பணி, நகராட்சி விவகாரத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பல பயன்பாட்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பைகளுக்கு மாறுவதற்கு நுகர்வோர் விழிப்புணர்வு திட்டங்களையும் இது மேற்கொள்ளும்.
சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஹிஸ் ஹைனஸ் ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி அவர்களால் வழங்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தும் விதமாக இந்தத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அபுதாபியில், ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்தது. துபாயில் ஜூலை 1 முதல், சில்லறை விற்பனையாளர்கள் ஒரு பைக்கு 25 ஃபில்ஸ் வசூலிக்கின்றனர். துபாயில் ஒரு மாதத்திற்குள் இதுபோன்ற பைகளின் பயன்பாட்டில் 40 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க | வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சூப்பர் செய்தி: 7 நாடுகளில் ஐஐடி தொடங்க திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ