இலங்கை: காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 2000 நாட்களை தாண்டி தொடரும் போராட்டம்
Sri Lanka: சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் நேற்று 2000 நாட்களை கடந்து சென்றது.
இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் சரண் அடைதவர்கள் காணாமல் போனது பற்றி விசாரிக்க சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த போராட்டம் நேற்று 2000 நாட்களை கடந்து சென்றது. 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போன மற்றும் யுத்த காலப் பகுதிகளில் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டும், இன்னும் பல வகைகளிலும் காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடி, அவர்களது உறவினர்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு தங்களுடைய போராட்டங்களுக்கு எந்த தரப்புக்களும் உரிய தீர்வுகளை வழங்காத நிலைமையிலே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கின் உடைய எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டங்களை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்திருந்தனர்.
அவ்வாறு தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது 2000 நாட்களைக் கடந்து தொடர்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அயராமல் இவர்கள் போராடி வருகின்றனர்.
இலங்கையில் உறவுகளை தேடி அலைந்து இவ்வாறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 140 தாய் தந்தையர்கள் உயிரிழந்துள்ள நிலையில் தங்களுக்கான நீதியை வலியுறுத்தி இவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தேதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் காணாமல் போனோரின் சர்வதேச தினமாகிய 30-8-2022 இன்று தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பெரிய அளவிலான மக்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்த போராட்டத்தில், பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்த கசங்கத்தினர், முச்சக்கர வண்டி சங்கத்தினர் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.
மேலும் படிக்க | நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் சீனா! நடவடிக்கை எடுக்க கோரும் சீமான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ