இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள 4 தமிழ்ப்படங்கள்!

போகிப்பண்டிகையான இன்றைய தினத்தில் 4 தமிழ்ப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

போகிப்பண்டிகையான இன்றைய தினத்தில் 4 தமிழ்ப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுகிறது. 

 

1 /4

என்ன சொல்ல போகிறாய் (EnnaSollaPogirai) : ஏ.ஹரிஹரன் இயக்கத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் குமார் நடித்துள்ள திரைப்படம் "என்ன சொல்ல போகிறாய்".  இப்படத்தில் தேஜு அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ், டெல்லி கணேஷ், சுப்பு மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று(13/01/2022) ரிலீசாகுகிறது. 

2 /4

கொம்புவெச்ச சிங்கம்டா (Kombu Vatcha Singamda) : S.R.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் "கொம்பு வச்ச சிங்கம்டா".  இந்த திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன். சூரி, இயக்குனர் மகேந்திரன்,  தயாரிப்பாளர் இந்தர்குமார், ஹரீஷ் ஃபெராடி, துளசி, தீபா ராமனுஜம், சென்ட்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இது 1990 – 1994  கால கட்டங்களில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.  இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று(13/01/2022) ரிலீசாகுகிறது. 

3 /4

நாய் சேகர் (Naai Sekar) : கிஷோர்குமார் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடித்துள்ள திரைப்படம் "நாய் சேகர்".  இப்படத்தில் கதாநாயகியாக 'குக் வித் கோமாளி' பவித்ரா லட்சுமி நடிக்கிறார், மேலும் மி ஜார்ஜ் மரியான், கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஒரு நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று(13/01/2022) ரிலீசாகுகிறது.

4 /4

கார்பன் (carbon) : ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் "கார்பன்".  இப்படத்தில் தன்யா, மாரிமுத்து, மூனார் ரமேஷ், வினோத் சாகர், அஜய் நட்ராஜ், விக்ரம் ஜெகதீஷ், பவுலின், மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று(13/01/2022) ரிலீசாகுகிறது.