விஜய் சேதுபதியின் அண்ணா-வா இது? அச்சு அசல் அதே முகம்! வைரல் போட்டோஸ்..

Actor Vijay Sethupathi Lookalike Person Photos : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய் சேதுபதி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு நபர், பார்ப்பதற்கு இவரைப்போலவே இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

Actor Vijay Sethupathi Lookalike Person Photos : கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர், விஜய் சேதுபதி. துணை கதாப்பாத்திரங்களில் நடித்து, பின்னர் ஹீரோவான இவர், இப்போது பான்-இந்திய நட்சத்திரமாக வலம் வருகிறார். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளரும் இவர்தான். விஜய் சேதுபதி, பார்ப்பதற்கும் பழகுவதற்கும் எளிமையானவராக இருப்பதால் ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த நிலையில், ஒருவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி போலவே இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

நடிகர் விஜய் சேதுபதி, முதன் முதலாக கதாநாயகனாக நடித்த படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’. இந்த படத்திற்கு பிறகு பல்வேறு வாய்ப்புகளை பெற்ற அவர், இன்று பான் இந்திய நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். 

2 /8

விஜய் சேதுபதிக்கு, ஜெஸ்ஸி என்பவருடன் 2003 ஆம் திருமணம் ஆகிவிட்டது. இவர்களுக்கு சூர்யா, ஸ்ரீஜா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர். 

3 /8

விஜய் சேதுபதி, தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அந்த வகையில் அவர் நடித்த கடைசி விவசாயி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

4 /8

96 பட விஜய் சேதுபதிக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ராம் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், இந்த படத்தில் ஒரு இயல்பான ஒரு தலை காதலனாக வாழ்ந்தே காட்டியிருப்பார். 

5 /8

விஜய் சேதுபதி, இப்போது வெறும் நடிகர் மட்டுமல்ல. படங்களையும் தயாரித்து வழங்கி வருகிறார். நாளுக்கு நாள், இவருக்கு கிடைத்திருக்கும் புகழும் பெருமைகளும் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

6 /8

விஜய் சேதுபதி, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், இதிலிருந்து விலக, புது ஹோஸ்ட்-ஆக விஜய் சேதுபதி களமிறக்கப்பட்டார். 

7 /8

விஜய் சேதுபதி நடித்திருக்கும் காந்தி டாக்கீஸ் படம், தற்போது ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. அவர், இன்னும் சில திரைப்படங்களில் கமிட் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது . நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது க்ளீன் ஷேவ் செய்த தோற்றத்தில் இருந்தார். இதையடுத்து, பார்ப்பதற்கு அவரைப்போலவே இருக்கும் ஒருவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

8 /8

ஒரு சிலர், இவர் பெயர் விக்ரம் சேதுபதி என்றும், இவர் விஜய் சேதுபதியின் அண்ணன் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், விஜய் சேதுபதிக்கு அண்ணன் இருப்பது உண்மைதான். ஆனால் அது இவர் இல்லையாம். இதையடுத்து, இவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி போலவே இருக்கும் இந்த நபரின் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.