வயநாடு வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கும் ஏர்டெல்! நிலநடுக்கப் பாதிப்பில் நிவாரணம்...

Airtel Relief To Kerala Wayanad Customers : கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 280ஐ கடந்துவிட்ட நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 150-க்கும் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்...

 

வயநாட்டில் மீட்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது.

1 /8

இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இலவச டெலிகாம் சலுகைகளை வழங்குவதாக பாரதி ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே.

2 /8

வயநாட்டில் பெய்த கனமழையால் மேப்பாடி பகுதியில் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழை என பல கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால், வீடுகள் மண்ணில் புதைந்தன.

3 /8

மக்கள் உறக்கத்தில் இருந்த நள்ளிரவில் வீடுகள் புதைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினர், காவல் படையினர், மீட்புக்குழுவினர், ராணுவத்தின் மோப்பநாய்கள் என மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன

4 /8

பேரழிவின் துயரத்தில் இருக்கும் வயநாடு வாடிக்கையாளர்களுக்கு, டேட்டா, வரம்பற்ற அழைப்பு, எஸ்எம்எஸ் போன்ற வசதிகளை ஏர்டெல் வழங்குகிறது. 

5 /8

ப்ரீபெய்டு மட்டுமல்ல, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஏர்டெல் மொபைல் சேவை அணுகலை நீட்டித்துள்ளது. ஆனால், இந்த சலுகைகள் கேரளாவில் உள்ள வயநாடு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது  

6 /8

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு நிவாரண பலன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வயநாடு பேரழிவுக்குப் பிறகு மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. ரீசார்ஜ் முடிந்துவிட்டால்,  3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட சேவைகளை வழங்கும் ஏர்டெல், வாடிக்கையாளர்கள் தினசரி 1 ஜிபி மொபைல் டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறலாம்  

7 /8

போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது, கட்டணம் செலுத்தாவிட்டாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு டெலிகாம் சேவைகளை பயன்படுத்தலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தை ஒன்றாக செலுத்தினால் போதும்  

8 /8

பொறுப்புத்துறப்பு: இணையத்தில் வெளியான செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் உள்ளடகத்திற்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது