Best Food for strong bones: எலும்பின் வலிமையை அதிகரிக்க சில ஈஸி டிப்ஸ்

ஆரோக்கியமாக இருக்க சீரான மற்றும் வழக்கமான உணவு அவசியம். அதன்படி ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களின் பலமே எலும்புகள்தான். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில், நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் மிகவும் முக்கியமானவை. ஒருவேளை நீங்கள் எலும்புகள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் விட்டால் எலும்புப் புரை, எலும்புத் தேய்மானம்,  போன்ற பல எலும்பு சார்ந்த பிரச்னைகளை சந்திக்க கூடும்.

எனவே உங்களில் உடலில் இருக்கும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இந்த உணவுகளை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

1 /5

பால் பொருட்கள்: பால் பொருட்கள் (பால், தயிர், சீஸ்) அதிக அளவு வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன, அவை எலும்புகளுக்கு மிகவும் பயனளிக்கின்றன. பால் பொருட்களில் புரதம் அதிகம். 

2 /5

உலர்ந்த பழங்கள்: உலர் பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பாதாம் பருப்பை உட்கொள்வதால் எலும்புகள் குறிப்பாக வலுவாக இருக்கும்.போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின்-டி இதில் காணப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கும் அழகுக்கும் நன்மை பயக்கும்.

3 /5

காய்கறிகள்: காய்கறிகளில் புரக்கோலி, கீரை வகைகள், முட்டை கோஸ் போன்றவற்றில் அதிக கால்சியம் சத்துக்கள் உள்ளது.  

4 /5

சோயாபீன்: சோயாபீனில் புரதம் மற்றும் கால்சியம் ஏராளமாகக் காணப்படுகின்றன. எலும்புகள் அதன் பயன்பாட்டால் வலுவடைகின்றன. இதற்காக, உங்கள் உணவில் சோயாபீன்ஸ் சேர்க்க வேண்டும். 

5 /5

பூண்டு மற்றும் வெங்காயம்: உங்களது தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்வது எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும். இதில் இருக்கும் சல்ஃபர் தான் இதற்கு காரணம்.