SBI டெபிட் கார்டின் PIN-யை மாற்ற இந்த இலவச எண்ணை அழைக்கவும்..!

உங்கள் ஏடிஎம் அட்டை எங்காவது தொலைந்துவிட்டால் அல்லது உங்கள் அட்டை குளோன் செய்யப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் இனி கவலைப்பட தேவையில்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கட்டணமில்லா எண்ணை வெளியிட்டுள்ளது. அதில், நீங்கள் அழைப்பதன் மூலம் உடனடியாக உங்கள் அட்டையைத் செயழிலக்க செயலாம். இந்த எண்களை அழைப்பதன் மூலம் புதிய அட்டையை வழங்கவும் நீங்கள் கோரலாம்.
  • Nov 03, 2020, 11:51 AM IST

1 /5

SBI வெளியிட்டுள்ள கட்டணமில்லா எண்களான 1800 112 211 மற்றும் 1800 425 3800 ஆகிய இந்த எண்களுக்கு, நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து அழைக்க வேண்டும் மற்றும் அட்டையைத் தடுக்க கோர வேண்டும். அதே நேரத்தில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து ஒரு அட்டையை வழங்கவும் நீங்கள் கோரலாம்.

2 /5

கட்டணமில்லா எண்ணை அழைத்த பிறகு, நீங்கள் ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டு சேவைக்கு எண் 2-யை அழுத்த வேண்டும். பின்னை உருவாக்க, 1 எண்ணை டயல் செய்ய வேண்டும்.

3 /5

உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து நீங்கள் அழைக்கிறீர்கள் என்றால், 1 எண்ணை அழுத்தவும், முகவருடன் பேச 2-யை அழுத்தவும். உங்கள் ATM அட்டையின் புதிய பின்னை உருவாக்க, உங்கள் அட்டையின் கடைசி 5 இலக்கங்களை டயல் செய்யுங்கள். எண்ணை உறுதிப்படுத்த 1-யை அழுத்தவும்.

4 /5

அட்டை எண்ணை உள்ளிட்டு, உங்கள் கணக்கு எண்ணின் கடைசி ஐந்தை அழுத்தவும். உறுதிப்படுத்த 1-யை அழுத்தவும். நீங்கள் மீண்டும் எண்ணை உள்ளிட விரும்பினால், 2-யை அழுத்தவும். இதற்குப் பிறகு, நீங்கள் பிறந்த தேதியை உள்ளிடவும். இதற்குப் பிறகு உங்கள் பின் உருவாக்கப்படும். புதிய பின் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அடுத்த 24 மணி நேரத்தில் உங்கள் பின்னை மாற்ற வேண்டும்.

5 /5

உங்கள் டெபிட் கார்டின் பின் எண்ணை நீங்கள் மறந்துவிட்டால் அல்லது Green PIN-யை உருவாக்க வேண்டும் என்றால், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 1800 112 211 மற்றும் 1800 425 3800 ஐ அழைப்பதன் மூலம் இதைச் செய்யலாம். IVR அமைப்பு மூலம், பின்னை உருவாக்க உங்களுக்கு வழிகாட்டப்படுகிறது.