தனுஷ் இயக்கத்தில் செல்வராகவன்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான உடன்பிறப்புகளான செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோர் தங்களது உழைப்பு மற்றும் அபரிமிதமான வளர்ச்சியால் தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். 

 

1 /5

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் 'துள்ளுவதோ இளமை' மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர்கள், 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'யாரடி நீ மோகினி' மற்றும் 'மயக்கம் என்ன' ஆகிய திரைப்படங்களை இணைந்து வழங்கியுள்ளனர்.  

2 /5

இப்போது கோலிவுட்டில் பரபரப்பான செய்தி என்னவென்றால், 'டி 50' என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தில் செல்வராகவன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்.   

3 /5

தனுஷ் தனது சகோதரரை எப்படிபட்ட கதாபாத்திரத்தில் காட்ட போகிறார் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம்,  என பல நட்சத்திர பட்டாளங்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  

4 /5

D50 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி, ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் போடப்பட்டு நடந்து வருகிறது.  

5 /5

அதே நேரத்தில் செல்வராகவன் '7 ஜி ரெயின்போ காலனி 2' படத்தின் வேளைகளில் இருந்து வருகிறார். 'மார்க் ஆண்டனி' படத்திலும் நடித்து உள்ளார் செல்வராகவன்.