Gas Cylinder Update | மத்திய அரசு கொடுக்கும் கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gas Cylinder Subsidy Update | கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என தெரிந்தவுடன் உங்கள் கையில் இருக்கும் செல்போன் வைத்தே மானியம் திரும்ப வர வைக்க முடியும். அது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
சிலிண்டர் மானியம் மட்டுமல்ல, மற்ற எந்த மானியமாக இருந்தாலும் உங்கள் அக்கவுண்டுக்கு சரியாக வர நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயமும் கூட. அது என்னவென்பதை இங்கே விலாவரியாக பார்த்து தெரிந்து கொள்வோம்.
அரசு எப்போதும் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் தான் மானியத்தை செலுத்தும். அந்தவகையில் உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு இப்போது இயக்கத்தில் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்து, அதில் எந்த வங்கி கணக்கு எண்ணுக்கு மானியம் செல்கிறது என தெரியாமல் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு மானியம் வர வேண்டும் என நீங்கள் விரும்பினாலோ உங்கள் மொபைல் மூலம் அதை செய்ய முடியும்.
கூகுள் இணையப்பக்கத்தில் சென்று என்பிசிஐ (NPCI) வெப்பேஜ்க்கு செல்லவும். அதில் Consumer என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் Bharat Aadhaar Seeding Enabler (BASE) ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.
இப்போது Request Aadhaar Seeding ஆப்சனை கிளிக் செய்யவும். அதன்பிறகு தப்பில்லாமல் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்து கீழே இருக்கும் கேப்சா குறியீட்டை டைப் செய்யவும். இப்போது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்.
அந்த ஓடிபியை உங்கள் உள்ளிட்ட பிறகு, இப்போது உங்கள் ஆதார் எண்ணுடன் கேஸ் மானியத்துக்காக இணைக்கப்பட்ட வங்கி எண் உள்ளிட்ட விவரங்கள் காண்பிக்கப்படும்.
ஒருவேளை நீங்கள் வங்கி கணக்கு எண்ணை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் Consumer >>Enter Your Aadhaar>>Seeding ஆப்சனை கிளிக் செய்யவும். அதில் முதலில் புதிய வங்கி கணக்கு எண்ணை இணைக்கும் ஆப்சன், இரண்டாவதாக ஒரே வங்கியில் இருக்கும் மற்றொரு வங்கி கணக்கு எண்ணை இணைத்தல் அல்லது வேறு வங்கி கணக்கு எண்ணை இணைத்தல் ஆப்சன் காட்டும்.
அதில் நீங்கள் விரும்பும் ஆப்சனை தேர்வு, வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்து, ஓடிபி உள்ளிட்டால் உங்கள் வங்கி கணக்கு எண்ணை புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.