4 வகையான ஆதார் அட்டைகளை இந்தியர்களுக்கு UIDAI வழங்குகிறது. இந்த அட்டைகள் நான்கும் நான்கு விதமானவை. அவற்றைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்
ஆதார் கடிதம் என்பது பாதுகாப்பான QR குறியீட்டைக் கொண்ட காகித அடிப்படையிலான லேமினேட் கடிதம் ஆகும். இந்த அட்டையைப் பெறுவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இது தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும். உங்களின் அசல் ஆதார் அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, புதிய ஆதார் அட்டையைப் பெறலாம். இந்த சூழ்நிலையில், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஆதார் கடிதத்தை ஆன்லைனில் பெறலாம். இதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்
ஆதார் அட்டையின் மின்னணு பதிப்பு இ-ஆதார் என்று அழைக்கப்படுகிறது. கடவுச்சொல் பாதுகாப்புக் கொண்ட இஆதார் UIDAI ஆல் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்டதாகும். ஆஃப்லைன் சரிபார்ப்பிற்கான பாதுகாப்பான QR குறியீட்டையும் கொண்டுள்ளது.
UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம், இதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இது ஆதார் நகலைப் போலவே செல்லுபடியாகும்
mAadhaar என்பது UIDAI ஆல் உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொபைல் பயன்பாடு (mAadhaar Mobile App) ஆகும். CIDR இல் பதிவுசெய்யப்பட்ட ஆதார் பதிவுகளை எடுத்துச் செல்ல ஆதார் வைத்திருப்பவர்களுக்கு இது ஒரு இடைமுகத்தை வழங்குகிறது. ஆஃப்லைன் சரிபார்ப்பிற்கான பாதுகாப்பான QR குறியீடும் இதில் உள்ளது.
இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய mAadhaar சரியான ஐடியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
PVC ஆதார் அட்டை ஒரு சிறிய அளவிலான ஆதார் அட்டை ஆகும். இதன் அளவு ஏடிஎம் கார்டு அல்லது டெபிட் கார்டு போன்றது. கொண்டு செல்ல எளிதான இந்த அட்டை பிளாஸ்டிக் ஆதார் அட்டை என்றும் அழைக்கப்படுகிறது. டிஜிட்டல் QR குறியீடு, புகைப்படம் கொண்டது.
ஆதார் எண், விர்ச்சுவல் ஐடி அல்லது பதிவு ஐடி மூலம் uidai.gov.in அல்லது Resident.uidai.gov.in என்ற வலைதளத்தில் இருந்து ஆதார் அட்டையை பதிவிறக்க 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.