முந்தைய பிஎஸ் 6 மாடலைப் போலவே இந்த புதிய மாடல் பைக்கும் இருக்கும். ஆனால் இந்த புதிய மாடல் பைக், பைன் கிரீன், கிரானைட் பிளாக், மிராஜ் சில்வர் (Pine Green, Granite Black, Mirage Silver) என மூன்று புதிய வண்ணங்களில் கிடைக்கிறது. (Photo: Royal Enfield/Twitter)
இந்த பைக் முன்புறத்தில் 31 மிமீ Telescopic forks பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் மோனோ-ஷாக் இணைக்கபப்டுள்ளது. (Photo: Royal Enfield/Twitter)
பைக்கின் முன்பக்கத்தில் ஹாலோஜன் (Halogen) லைட், பின்புறத்தில் எல்.ஈ.டி லைட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இருக்கையில் குஷன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இருக்கை உயர் அடர்த்தி கொண்ட நுரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பைக்கிற்கு ரேடியல் டயர்கள் அனைத்தும் ஸ்போக்களுடன் கிடைக்கின்றன. முன் டயர் 90 / 90-21 மற்றும் பின்புறம் 120 / 90-17 அளவு கொண்டது. (Photo: Royal Enfield/Twitter)
பைக்கில் புதுப்பிக்கப்பட்ட டேங்க் பிரேஸ்களும் கிடைக்கின்றன, இது உயரமான பைக்குகளில் சவாரி செய்வதை எளிதாக்குகிறது.
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் இந்திய வீதிகளில் இறங்கும்போது, சாகச மோட்டார் சைக்கிளைப் போலவே இருக்கும்.
இந்த பைக் முன்பை விட விலை உயர்ந்தது, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த தொகுப்பை உருவாக்குகிறது. 2021 ராயல் ஹிமாலயன் பைக்கின் விலை 2,01,314 ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்). ராயல் என்ஃபீல்ட் ஷோரூம்களில் இந்த புதிய பைக் விற்பனைக்கு வந்துவிட்டது.