முடிக்கு ஷாம்பு பயன்படுத்தும் முன்பு இந்த தவுறுகளை செய்ய வேண்டாம்!

தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்துவது நல்லது என்றாலும், அதனை பயன்படுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லை என்றால் முடிக்கு பாதிப்பு ஏற்படும். 

 

1 /6

தற்போது பலருக்கும் முடி கொட்டும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முறையான உணவுகளை எடுத்து கொள்ளாதது முதல், சரியான முடி பராமரிப்பு இல்லாதது வரை நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது.  

2 /6

முடி பராமரிப்பில் பார்க்க வேண்டிய முதல் விஷயம் சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது ஆகும். கடுமையான வேதி பொருட்கள் சேர்க்கப்பட்ட ஷாம்புக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  

3 /6

இவை பொடுகு தொல்லையை ஆரம்பத்தில் சரி செய்தாலும், பின்னாலில் உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும். எனவே இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.   

4 /6

சிலர் தலையில் உள்ள அழுக்குகளை நீக்க தினசரி ஷாம்பூவை பயன்படுத்துகின்றனர். இதனால் தலையில் உள்ள இயற்கைய எண்ணையும் வெளியேறி வறட்சி ஏற்படுகிறது.   

5 /6

எனவே வாரத்திற்கு 2 அல்லது 3 முறை ஷாம்பு பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் அளவை பராமரிக்க முடியும். அதே போல ஷாம்பூவை அதிகம் தேய்க்காமல் மெதுவாக மசாஜ் செய்வது நல்லது.   

6 /6

ஷாம்பூ பயன்படுத்திய பிறகு முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது கூடுதல் பளபளப்பை தருகிறது. ஷாம்பூவைப் போலல்லாமல், கண்டிஷனரை முடியின் நடுப்பகுதி மற்றும் முனைகளில் பயன்படுத்த வேண்டும்.