ஆன்லைன் மூலம் எஸ்பிஐ கணக்கை மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?

எஸ்பிஐ வங்கி கணக்கை ஒரே இடத்திலிருந்தபடியே ஒரு வங்கி கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முடியும்.

 

1 /4

எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளமான www.onlinesbi.com என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.  இப்போது பெர்சனல் பேங்கிங் என்பதை டேப் செய்து உங்கள் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிடவும்.  

2 /4

அதன் பிறகு இ-சேவைகள் என்பதை க்ளிக் செய்து 'சேமிப்பு கணக்கை மாற்று' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். மாற்ற வேண்டிய வங்கி கணக்கை தேர்வு செய்து, நீங்கள் மாற்ற விரும்பும் வங்கி கிளையின் கோடை தேர்ந்தெடுக்க வேண்டும்.  

3 /4

'கெட் பிரான்ச் கோட்' என்கிற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும், அதன் பின் கிளையின் கோட் தானாகவே அப்டேட் ஆகிவிடும்.  இப்போது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து அதனை ஏற்றுக்கொள்ள சமர்ப்பி என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.  

4 /4

இப்போது மொபைலுக்கு வரும் ஓடிபியை உள்ளிட வேண்டும், அதன் பிறகு உங்களது கோரிக்கை வெற்றிகரமாக முடிக்கப்பட்டதற்கான அறிவிப்பு திரையில் காட்டப்படும்.