கங்கனா ரனௌத் தனது வரவிருக்கும் 'தலைவி' படம் பற்றி ஒரு அற்புதமான விவரத்தை பகிர்ந்துள்ளார். விவரங்களைப் பார்ப்போம் ...
இதையடுத்து படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தலைவி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் தொடங்கியது. அதில் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.
விப்ரி நிறுவனம் சார்பில் விஷ்ணு இந்தூரி இப்படத்தை தயாரிக்கிறார். விஜேந்திர பிரசாத் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். மேலும், பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கங்கனா ரனௌத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவை அடிப்படையாகக் கொண்ட 'தலைவி' என்ற வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில புதிய படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Gallery