7 Ways To Create Your Dream Life In One Year : நம்மில் பலருக்கு நமக்கு பிடித்தவாறு வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் என தோன்றும். அதை உருவாக்க சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
7 Ways To Create Your Dream Life In One Year : 2025ஆம் ஆண்டு வரவிருக்கிறது. இப்போது முடியவிருக்கும் 2024ஆம் ஆண்டில் நாம் பல விஷயங்களை செய்ய வேண்டும் என நினைத்திருப்போம். ஆனால் அவற்றை செய்ய முடியாமல் போயிருக்கும். ஆனால், உங்களுக்கு தேவையான ஒரு வாழ்க்கையை உருவாக்க சில மாற்றங்களை கொண்டு வந்தாலே போதும். நினைத்ததை கையில் பெறலாம். அப்படிப்பட்ட மாற்றங்கள் என்ன தெரியுமா?
நீங்கள் எதிர்பார்க்கும் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் விவரமாக நினைத்துப்பார்க்க வேண்டும். முடிந்தால் அந்த விஷயங்களை போட்டோக்களாக ப்ரிண்ட் செய்து பலகையில் ஒட்டி வைத்து அதனை தினமும் பார்க்கலாம்.
உங்கள் வாழ்வில் என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பதை எடை போட்டு பாருங்கள். எதெல்லாம் உங்கள் வாழ்வில் ஏற்றத்தை காண்கிறது, எதெல்லாம் காணவில்லை என்பதை பாருங்கள். அதில் எதை சரிசெய்ய வேண்டும் என நினைக்கிறீர்களோ, அதை தணிக்கை செய்யுங்கள்.
எந்த மாற்றமும், ஒரே நாளில் நிகழ்ந்து விட வேண்டும். நீங்கள் திட்டமிட்டபடி சில விஷயங்கள் செல்லவில்லை என்றாலும் சரி, அப்போதும் நீங்கள் ஒரு இலக்குக்காக செய்ய வேண்டிய வேலையை செய்துகொண்டே இருக்க வேண்டும்.
உங்களுக்கு கிடைக்கும் வெற்றி சிறியதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் அதனை கொண்டாட தவறாதீர்கள். ஆனால், அதன் பிறகு தொடர்ந்து உங்கள் இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்து விட வேண்டும். இது உங்களை தொடர்ந்து முன்னேறிச்செல்ல ஊக்குவிக்கும்.
உங்கள் மனதுக்கும், நீங்கள் அடைய வேண்டும் என்று நினைத்திருக்கும் இலக்கிற்கும் உண்மையாக இருக்க வேண்டும். உங்களுக்கு என்னென்ன வெற்றிகள் அல்லது தோல்விகள் கிடைத்திருக்கிறது என்பதை கணக்கிலெடுத்து பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்.
எந்த விஷயமாக இருந்தாலும் அதை பெரிதும் யோசிக்காமல், எளிமையாக யோசியுங்கள். உங்களுக்கு புரிந்ததை புரிந்ததாக எடுத்துக்கொண்டு, புரியாததை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஒரு நேரத்தில் ஒரு விஷயம்தான் செய்ய முடியும் என்றால், அந்த நேரத்தில் அதை மட்டும் செய்யுங்கள். அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்தால் எல்லாமே வெறுத்துவிடும்.
மனிதர்களை பலர், சமூக மிருகங்கள் என கூறுவர். நம்மால், பிறர் இல்லாமல் இருக்க முடிந்தாலும், அது ரொம்ப மகிழ்ச்சியான நாட்களாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்களுக்கு ஆதரவாக இருக்கும் நண்பர்களை எப்போதும் கூடவே வைத்திருங்கள். அப்போது நீங்கள் விழுந்தாலும் அவர்கள் உங்களை தாங்கி பிடிப்பர்.