Monkeypox Virus: குரங்கு அம்மை அறிகுறிகளுடன் எய்ம்ஸ் வந்த நோயாளி... மருத்துவமனையில் பரபரப்பு

Monkeypox Virus: ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் தொடங்கிய குரங்கு அம்மை வைரஸ் தொற்று, ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பரவித் தொடங்கி, நமது அண்டை நாடான பாகிஸ்தான் வரை வந்துவிட்டதால், இந்திய அரசு தேவையான எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் எய்மஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

1 /8

இந்தியாவில் குரங்கு அம்மை பரவல்: தில்லியில், குரங்கு காய்ச்சலின் அறிகுறிகளுடன் நோயாளி  ஒருவர் சிகிச்சையில் உள்ளதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. நோயாளி வெளிநாடு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிலையில், அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தலைவலியுடன் குரங்கு காய்ச்சலின் பிற அறிகுறிகள் இருந்தன. 

2 /8

அவசர சிகிச்சை பிரிவு: எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவர் AB-7 என்னும் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த வார்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 /8

குரங்கு அம்மை காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த அவருக்கு பரிசோதனை நடத்தியதில், அவர் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும், அவர் எங்கிருந்து வந்தார்... அவருடன் வந்த வேறு யாருக்காவது குரங்கு அம்மை அறிகுறிகள் இருக்கிறதா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. 

4 /8

தில்லி எய்மஸ் மருத்துவமனையில் தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள நிலையில், நோயாளிக்கு என்ன வகையான அறிகுறிகள் இருந்தன என்பது குறித்து மருத்துவமனை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

5 /8

Mpox தடுப்பூசி:  நேற்று முன் தினம், கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் குரங்கு அம்மை வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6 /8

MPOX  சிகிச்சை: குரங்கு அம்மை வைரஸ் தொற்று  நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், வலி மற்றும் காய்ச்சல் போன்ற அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது. 

7 /8

பெரியம்மை தடுப்பூசி: பெரியம்மை அறிகுறிகளும் குரங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளும், ஒரே மாதிரி இருப்பதால், பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை வைரஸ் தாக்குதலில் இருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

8 /8

குரங்கு வைரஸ் தொற்று தொற்று அறிகுறிகள்:  Mpoxதொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி ஆகியவற்றுடன் கைகள், கால்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் அரிப்பு ஏற்படலாம். இறுதியில் இவை கொப்புளங்களாக உருவாகின்றன.